நாளை ஆவணி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா?
திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார் தான் நமக்கு முதலில் நினைவிற்கு வருவார்.அப்படியாக அங்கு கிரிவலம் செல்ல பல பக்தர்கள் வருகின்றனர்.
நாளை ஆவணி பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.அப்படியாக நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை பார்ப்போம்.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.02 மணி வரை பவுர்ணமி உள்ளது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பவுர்ணமி நாட்களில் நாம் கிரிவலம் செல்ல நீண்ட நாள் துன்பம் பிரச்சனைகள் விலகி வாழ்க்கை ஒளிமையம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |