7 கிழமைகளில் இந்த கிழமை மாத்திரம் எந்த பொருளும் வாங்காதீங்க- துரதிஷ்டம்
இந்து மதத்தில் ஜோதிடத்திற்கு என தனிமதிப்பு உள்ளது.
இதன்படி, வாரத்தின் ஏழு நாட்களும் தனி மனிதனுக்கு முக்கியமான நாளாக பார்க்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களின் ஆளுமைகளை கொண்டிருக்கும். இதனால் 7 நாட்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் வாங்கினால் அன்றைய நாளுக்கான அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அதே சமயம், அந்த நாளுக்கு ஒவ்வாத பொருட்களை வாங்கும் போது துரதிஷ்டம் ஏற்படும் எனவும் ஜோதிடம் கூறுகிறது.
அந்த வகையில், எந்த நாட்களில் என்ன பொருட்களை வாங்க கூடாது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த நாளில் எந்த பொருள் வாங்க கூடாது
1. திங்கட்கிழமை
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பதால் இந்த நாளில் தானியங்கள் வாங்கலாம். அதே சமயம் வண்ணங்கள், தூரிகைகள், இசைக்கருவிகள் போன்ற கலை சம்பந்தப்பட்ட பொருட்களையும், நகல் புத்தகங்கள், விளையாட்டு தொடர்பான பொருட்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை வாங்க கூடாது.
2. செவ்வாய்க்கிழமை
தெய்வங்களுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை பால், மரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்க கூடாது. உலோகங்கள் மற்றும் காலணிகள் வாங்க கூடாது.
3. புதன்கிழமை
வீடு, மனை, பத்திரம், அரிசி, மருந்து, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மறந்தும் வாங்க வேண்டாம்.
4. வியாழன்கிழமை
குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழன் கிழமை கண்ணாடி பொருட்கள், பூஜை பொருட்கள், கூர்மையான பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டாம்.
5. வெள்ளிக்கிழமை
இந்த நாட்களில் மசாலா பொருட்கள் வாங்க கூடாது. கத்தி, கத்திரிக்கோல் இரும்பு சார்ந்த பொருட்களும் வாங்க கூடாது.
6. சனிக்கிழமை
சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாள் என்பதால் இந்த நாட்களில் உப்பு, அதிக இடையில பொருட்கள், வீடு, இரும்பு சம்பந்தமான பொருட்கள் வாங்கவே கூடாது.
7. ஞாயிற்றுக்கிழமை
இரும்பு மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்க கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |