பகவத் கீதை: எல்லாம் சரியாக செய்தும் தோல்வி அடைகிறீர்களா- இந்த பதிவு உங்களுக்காக தான்
நாம் எல்லோரும் நம்முடைய இலக்கை நோக்கிய பயணத்தை மிக ஒழுக்கமாகவும் அதற்கான முயற்சிகளும் செய்து கொண்டிருக்கிறோம். சமயங்களில் நாம் எல்லாம் சரியாக செய்தாலும் நமக்கான அங்கீகாரமும் வெற்றிகளும் கிடைப்பதில்லை. அல்லது அதை நோக்கி பயணம் செல்லும் பொழுது நமக்கு வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகமும் பயமும் இருக்கும்.
அப்படியாக பகவத் கீதையில் நாம் எல்லாம் சரியாக செய்தும் நமக்கு தோல்விகள் கிடைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
மகாபாரதத்தில் அர்ஜுனன் போருக்காகவே தன்னை தயார் செய்த கொண்ட ஒரு மனிதன். மேலும், அர்ஜுனன் குருசேத்திரப் போரில் அர்ஜுனன் திறமையை கண்டு அவன் பயம் கொள்ள வில்லை. ஆனால் போரின் இறுதியில் வரக்கூடிய முடிவைக் கண்டு அவன் அச்சம் கொண்டான். இவை முடிவை நோக்கிய எதிர்பார்ப்புகளோடு வரக்கூடிய பயமாகும்.
இதைத்தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார் செயலை செய்வதற்கான அதிகாரம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது. அதற்கான பலனை எதிர்பார்ப்பது நமக்குரியது அல்ல என்கிறார். அதனால் செயலை செய்வதில் கவனமாக இருந்துவிட்டு அதற்குரிய முடிவை நாம் பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டால் வரக்கூடிய வெற்றியோ தோல்வியோ நம்மை பாதிக்காத அளவிற்கு இருக்கும்.
ஒரு வேலை நாம் செய்யக்கூடிய செயல் தோல்வியில் முடிந்து விட்டால் நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த எண்ணமானது அந்த தோல்வியை நமக்கு ஒரு மிகப்பெரிய தண்டனையாக மாற்றி விடும். ஆதலால் மனிதர்களுடைய பிறப்பே அவர்கள் எதையும் எதிர்பாராமல் எதன் மீதும் பற்று வைக்காமல் அவர்களுடைய கடமையை செய்வதே ஆகும்.
இன்றைய நவீன காலகட்டங்களில் நாம் பல நேரங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான முக்கிய காரணம் நாம் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக காத்திருப்பதே ஆகும். நாம் செய்யும் கடமைகளை நாம் தவறாமல் நேர்மையாக நல்ல எண்ணங்களோடு செய்துவிட்டால் இந்த பிரபஞ்சம் அதற்கான பலனை கொடுத்துவிடும்.
ஆனால் நாம் எந்த ஒரு செயலை செய்யும் பொழுதே பலனை எதிர்பார்த்து கொண்டு செய்யும் பொழுது நம் மனமானது செய்யும் செயல்களில் ஒரு தடுமாற்றத்தை கொடுத்து வருகின்ற வெற்றி தோல்வியையும் நம் முழுமையாக உணர விடாமல் ஒரு கஷ்டத்தில் நம்மை தள்ளுகிறது.
ஆதலால் செயலை செய்து விடுவோம் பலன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவை நம்மை வந்து சேரட்டும் . ஆனால் சேரும் பொழுது நாம் நம்மை எந்த ஒரு இடத்திலும் அவை தொந்தரவு செய்யாத அளவு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







