பைரவர் விரதம் இருக்க சிறந்த நாள்

By Sakthi Raj Jun 04, 2024 05:00 AM GMT
Report

ஒருவர் கால பைரவர் மனதில் நினைத்து எந்த அக்காரியம் தொடங்கினாலும் அது கண்டிப்பாக வெற்றியாகவும்.

கால பைரவர் சிவனின் அவதரம் அவர் பரணி நட்சத்திரத்தில்அவதரித்து உள்ளார்.ஆக பைரவரை பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

பொதுவாக பைரவரை தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். அதுமட்டும் அல்லாமல் எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

பைரவர் விரதம் இருக்க சிறந்த நாள் | Bairavar Viratham Nanmaigal Nalangal Palangal News

ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒருபொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம்.

இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு

சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.

சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US