சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்.
சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்.
ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.
சனி பகவானின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும்.
வழிபாடு செய்வதற்கு புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிந்து பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்.
பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைத்து பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
அந்த நல்லெண்ணெயில் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும். பின் அதை நீலப் பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்.
இப்படி மொத்தம் 8 தீபங்களை 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |