பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்
சாஸ்திரங்கள் படி பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது.
பல்லி விழுந்தால், முதலில் செய்ய வேண்டியது குளித்து விட்டு வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.
கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
பல்லி நம் மேல் விழுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பல்லி விழுவதன் பலன்கள்
இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.
வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.
பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.
தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.
வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். அதுபோல், இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.
இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
அதுபோல், வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.