கண் திருஷ்டி விலக குளிக்கும் நீரில் இந்த 5 பொருட்கள் சேர்த்தால் போதும்
ஆன்மீகத்தில் தண்ணீருக்கு அதிக சக்திகள் உண்டு.அதாவது தண்ணீருக்கு எதிர்மறை ஆற்றல்,கண் திருஷ்டி போன்றவற்றை நீக்கும் பண்புகள் உண்டு.அப்படியாக நாம் குளிக்கும் பொழுது இந்த 5 பொருட்களை தண்ணீரில் சேர்த்து குளித்தால் நமக்கு உண்டான பாதிப்புகள் விலகும் என்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
கல் உப்பு:
பொதுவாக நமது இந்து மத சாஸ்திரத்தில் கல் உப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.காரணம் கல் உப்பில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது.மேலும்,இந்த கல் உப்பிற்கு எதிர்மறை ஆற்றலை முற்றிலுமாக அகற்ற கூடிய சக்திகள் உண்டு.இதனால் நாம் குளிக்கும் நீரில் இந்த கல் உப்பை கலந்து குளிக்க நமக்கு ஏற்பட்ட தொந்தரவுகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
மஞ்சள் தூள்:
மஞ்சள் ஒரு மகத்துவம் நிறைந்த பொருள் ஆகும்.அப்படியாக வாழ்க்கையில் திருமண தடையை சந்திக்கும் நபர்கள் வியாழக்கிழமை அன்று குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள் கலந்து குளித்து வர அவர்களுக்கு உண்டான தடைகள் விலகும்.மேலும்,நமக்கு சரும பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.
ஏலக்காய்:
இந்த ஏலக்காய் மஹாலக்ஷ்மிக்கும் குபேரருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஆகும்.இந்த ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு குளிக்கும் பொழுது நேர்மறை ஆற்றல் பெருகும்.தொழிலில் நல்ல வளர்ச்சி,லாபம் உண்டாகும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பால்:
சமீபகாலமாக பலரும் வேலை பளு,குடும்ப பிரச்சனை என்று பதட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பாலை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் மன அமைதி,சிந்தனையில் தெளிவு உண்டாகும்.நேர்மறை ஆற்றல் பெருகும்.
குங்குமப்பூ:
குங்குமப்பூ எடுத்து வறுத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்கும் பொழுது நமக்கு வசியத்தன்மை கிடைக்கும்.முகத்தில் நல்ல தெளிவு உண்டாகும்.எதையும் பாசிட்டிவாக அணுகும் ஆற்றல் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |