உடைந்த மனதில் நம்பிக்கையை விதைக்கும் லலிதா சகஸ்ரநாமம்
நாம் அனைவரும் சகஸ்ரநாமம் பற்றி கேள்வி பட்டு இருப்போம். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.மனிதனுக்கு எல்லாம் காலமும் ஒரே மாதிரி அமைவது இல்லை.தோல்வி வெற்றி என்று மாறி மாறி சந்திக்கவேண்டிய சூழ்நிலை வரும்.
அப்படியாக சமநிலை உணரவும்,மனதில் கருணை,ஆனந்தம் தைரியம் கொண்டு வாழவும் ஒருவர் நிச்சயம் லலிதா சகஸ்ரநாமம் படிக்க வேண்டும்.
மேலும், லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள்,பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானத்தை நாம் பெற முடியும்.
அப்படியாக சரஸ்வதி தேவி குரு ஹயக்ரீவர் ஒரு சமயம் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார்.தேவியின் இந்த ஆயிரம் நாமங்கள் பல ரகசியத்தின் ரகசியமானது என்றும் அம்பாளின் லலிதா சகஸ்ரநாமம் போல் எந்த துதியும் காணமுடியாது என்றும் பெருமைகளை சொன்னார்.
அதே போல் ஒருவர் தெடர்ந்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய அவர்கள் மனதில் வலிமை உண்டாகும்.உடம்பில் ஏற்பட்ட நோய் விலகும்.வீட்டில் செல்வம் பெருகும்.நீண்ட ஆயுள் கிடைக்கும்.எதையும் எதிர்த்து போராடும் குணம் பிறக்கும்.அவர்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளை பெற்றவர்களாக ஆகின்றனர்.
மேலும் கங்கையில் குளித்த பயனும்,காசியில் பாவத்தை கரைத்த புண்ணியமும் அன்னதானம் செய்த தர்மம்,போன்ற மிக சிறந்த செயலுக்கும் மேலானது லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது.
ஆக வாழ்க்கை எதிர்பாரா சூழ்நிலையில் இருட்டான பாதையில் கூட்டிச்செல்லும் பொழுது அம்பிகையின் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய நிச்சயம் ஒளி நிறைந்த பாதை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |