இந்த மந்திரங்களை நீங்கள் தவறாக உச்சரித்தாலும் முழுமையான பலனை கொடுக்குமாம்
இறை வழிபாடுகளில் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது என்பது கூடுதல் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியாக, ஒவ்வொருவருக்கும் மந்திரங்களை பாராயணம் செய்யும்பொழுது மனதில் ஒரு சில குழப்பங்களும் பயமும் உண்டாகும்.
அதாவது நாம் ஏதேனும் தவறுதலாக மந்திரங்களை பாராயணம் செய்ய அவை நமக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுத்து விடுமோ என்கின்ற அச்சம் இருக்கும். அந்த வகையில், முருகப்பெருமானுடைய இந்த மந்திரத்தை ஒருவர் தவறாக உச்சரித்தாலும் அவர்களுக்கு முழு பலன் கிடைக்கிறது, அதை பற்றி பார்ப்போம்.
முருகப்பெருமானுடைய சக்தி வாய்ந்த மந்திரமாக "சரவணபவ" என்கின்ற மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை நாம் எப்படி மாற்றி பாராயணம் செய்தாலும் நமக்கு முழு பலனை கிடைக்கிறது.

எப்படி சொன்னால் என்ன பலன்?
சரவணபவ - சர்வத்தையும் பெறுகின்ற வசியம் கிடைக்கிறது.
ரவணபவச - உங்களுடைய செல்வமும் சமுதாயத்தில் செல்வாக்கும் உயர்கிறது.
வணபவசர - பகைவர்களால் ஏற்படுகின்ற தொல்லை நீங்கி அமைதி கிடைக்கிறது.
ணபவசரவ - எதிர்ப்புகள் மற்றும் எதிரிகள் முற்றிலும் விலகி திசை தெரியாமல் ஓடி விடுவார்கள்.
பவசரவண - எல்லா உயிர்களுக்கும் நாம் பிடித்தவர்களாக ஆகின்றோம்.
வசரவணப - தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்டு உதவுகிறது.

இவ்வாறு சரவணபவ என்கின்ற மந்திரத்தை முதல் எழுத்துக்களை முன்னும் பின்னுமாக மாற்றி அமைத்து நாம் பாராயணம் செய்தாலும் அந்த மந்திரத்தை முழுமையாக நாம் பாராயணம் செய்ததற்குரிய பலன் உண்டு.
அது மட்டும் அல்லாமல் "சரவணபவ" என்கின்ற மந்திரத்தை ஒருவர் 12 முறை தினமும் பாராயணம் செய்து வரும் பொழுது அவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்த முழு பலனை பெறுகிறார்கள். இதை கந்த சஷ்டி கவசத்தில் பாலதேவராய சுவாமிகளும், "ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே ஜபித்து உகந்து நீர் அணிய"என்று குறிப்பிடுகிறார்.
எவரொருவர் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை பாராயணம் செய்து நெற்றியில் முருகப்பெருமானை நினைத்து விபூதி வைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்த முழு பலன் கிடைத்து வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை விலகி பொருளாதார நெருக்கடிகள் நீங்கி சமுதாயத்தில் பெயரும் புகழும் அந்தஸ்தும் கிடைக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |