உண்மையான பக்தி எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் வெல்லுமாம்.. எப்படி தெரியுமா?
இந்த உலகத்தில் நாம் இறைவழிபாடுகளை கடந்து பல விஷயங்களை நம்புகிறோம். ஆனால் உண்மை பக்தி என்பது இறைவனை நம்பிய பொழுது எந்த ஒரு குழப்பத்திற்கும் எதிர்கால பயத்திற்கும் ஆளாகுவதில்லை.
ஆனால் மனிதர்களால் அவ்வாறு செயல்பட முடியவில்லை. அப்டியாக, மனிதர்களுடைய உண்மையான பக்தி எந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை பற்றியும் அதோடு, கந்த குரு கவசம் முக்கியத்துவமும் பற்றியும் அதை பாராயணம் செய்யும் பொழுது வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சொற்பொழிவாளர் விஜயகுமார் அவர்கள் .
பொதுவாக, ஜோதிட ரீதியாக நாம் பரிகாரங்கள் செய்வது உண்டு. ஆனால் உண்மையில் இறைவன் மீது வைத்திருக்கக் கூடிய உண்மையான பக்தி ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும் வெல்லும் வலிமை கொண்டது என்கிறார். மேலும், முருகப்பெருமானுடைய கந்த குரு கவசம் வெறும் பாடல்களோ மந்திரங்களோ மட்டுமல்ல.
அவை நம்முடைய வாழ்க்கையில் எதிர் கொள்கின்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் நமக்கு தேவையான மன வலிமையை கொடுக்கப்கூடியதாகவும் இருக்கிறது. ஆதலால், எவர் ஒருவர் தினமும் காலை மாலை என்று இரு வேளையில் கந்த குரு கவசம் படித்து வருகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் கட்டாயம் இந்த பிரச்சனைக்கும் முருகனின் அருளால் அவர்கள் துவண்டு போவதில்லை.
அதோடு ஒரு மனிதனை இறைவழிபாடு எந்த அளவிற்கு மாற்றுகிறது? அவருடைய உண்மையான பக்தி அவர்களை எந்த நிலையில் இருந்து அவர்களை மீட்டெடுக்கிறது என்பதை பற்றியும் கந்த குரு கவசத்தை நாம் படிக்கும் பொழுது என்னென்ன விஷயங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் முழுமையாக இது காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்