வெள்ளிக்கிழமை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த வாராஹி அம்மன் மந்திரம்

By Sakthi Raj Oct 25, 2024 05:27 AM GMT
Report

வெற்றிக்குரிய தெய்வம் வாராஹி அம்மன்.மனிதனுக்கு ஏற்படும் பயத்தை போக்குபவள்.சோழர்கள் காலத்தில் சோழ மன்னர் அவர் போருக்கு செல்லும் பொழுது மறவாமல் வாராஹி அம்மனின் அருள் ஆசியை பெற்ற பிறகே செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் வாராஹி அம்மனின் சக்தியை.

வாழ்க்கை என்பது போர் தான்.அதில் நாம் எந்த ஒரு விஷயத்திற்கும் மெனக்கிட்டு போராடி தான் ஜெயிக்க வேண்டும்.எதுவும் எளிதில் கிடைத்திடாது.அவ்வாறு எளிதில் கிடைப்பவை நீண்ட நாள் நம்முடன் பயணம் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியாக ஒரு லட்சியம் அடைய இடைவிடாது உழைப்பும் நம்பிக்கையும் தேவை.அந்த நம்பிக்கைக்கு இன்னும் உறுதுணையாக இறைவழிபாடு இருக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த வாராஹி அம்மன் மந்திரம் | Benefits Of Chanting Varahi Amman Mantras

எவன் ஒருவன் இறைவனை இறுக்கமாக பற்றி கொள்கிறானோ அவனுக்கு துன்பம் இல்லை. அந்த வகையில் நினைத்ததை அடைய வெற்றிகள் குவிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய வாராஹி அம்மனின் வழிபாட்டையும் அன்று சொல்லி வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றியும் பார்ப்போம்.

எல்லா மாதங்களில் வரும்  வெள்ளி செவ்வாய் கிழமை கடவுள் வழிபாட்டிற்கு உகந்த மாதம்.அப்படியாக இன்று வெள்ளிக்கிழமை வீட்டில் வாராஹி அம்மன் படம் இருந்தால் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?

முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?

பிறகு அம்மனுக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து அதில் அட்சதையை பரப்ப வேண்டும். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய்,தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இவை மூன்றையும் சரிசமமாக ஊற்றி சிவப்பு நிற திரியைப் போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த வாராஹி அம்மன் மந்திரம் | Benefits Of Chanting Varahi Amman Mantras

பிறகு அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் படைக்க வேண்டும்.அதோடு வாராகி அம்மனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சள் மாலை சாத்துவது சிறப்புகளை தரும். பிறகு கையில் பச்சரிசியை வைத்துக்கொண்டு "ஓம் மஹா சேனாயை நமஹ" என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் 54 முறை உச்சரிக்க வேண்டும்.

இப்படி உச்சரித்த பிறகு கையில் இருக்கக்கூடிய பச்சரிசியை பறவைகளுக்கு தானமாக தந்து விட வேண்டும். இதோடு இன்றைய தினத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை பிறருக்கு தானமாக தருவதன் மூலம் நிறைவேறாத நீண்ட நாள் வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

வீட்டில் தடைபட்ட விஷயங்கள் மீண்டும் தொடங்கி நல்லபடியாக தொடரும் என்று நம்பப்படுகிறது.இந்த பூஜையை சிறப்பு வாய்ந்த ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வாழ்க்கையில் வாராஹி அம்மனின் அருள் கிடைத்து நல்ல மாற்றம் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US