வீட்டிற்கு தினமும் காகம் வருவது நல்லதா?சாஸ்திரம் சொல்வது என்ன?
காகம் எல்லா இடங்களிலும் நாம் பார்க்கக்கூடிய பறவை.மேலும் நம்முடைய வீட்டில் சமைத்த உணவை முதலில் காகத்திற்கு வைத்த பிறகே நாம் உணவு உட்கொள்வோம்.அப்படியாக தினமும் காகத்திற்கு பெரும்பாலான வீடுகளில் தண்ணீரும் உணவும் வைப்பதை நம்மால் பார்க்க முடியும்.
அந்த அடிப்படையில் தினமும் நம் வீட்டிற்கு காகம் வருவது நன்மை அளிக்குமா?சாஸ்திரங்கள் சொல்லுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
காகங்களில் பொதுவாக மூன்று வகையான காக்கை வகைகள் உள்ளன. அதாவது, உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட அண்டங்காக்கை வகை. அதன் பின் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கை. அதோடு அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படும் அரிதான வெள்ளை காக்கை.
அந்த வகையில். சனிபகவானின் வாகனம் என்று தொடங்கி பித்ருக்களின் வடிவமாக காக்கைகள் பார்க்கப்படுகின்றன.அதாவது நம்முடைய வீட்டில் இறந்த நபர்கள் முன்னோர்கள் காகம் வடிவில் நம்மை பார்க்க வருவதாக நம்பப்படுகிறது.
அதே போல் நாம் தினமும் வீட்டில் வைக்கும் உணவுகளை காகம் உட்கொள்வதால் அதை நம் பித்ருக்களே சாப்பிட்டு நமக்கு ஆசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.எத்தனையோ சாஸ்திரங்கள் இருந்தாலும் காக்கை பற்றிய நம்பிக்கையை யாரும் எளிதில் மூடநம்பிக்கை என்று கடந்து விடுவதில்லை.
இப்பொழுது காக்கை நம்முடைய வீட்டிற்கு வந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி பார்ப்போம்.ஒரு கருப்பு காகம் (அண்டங்காக்கை) தனிப்பட்ட முறையில் நமது வீடுகளில் அமர்ந்து கரைகிறது என்று சொன்னால் அது மிக தீய சகுனத்தை குறிக்கிறது.
அதேபோல் ஒரு மனிதனின் தலை மேல் ஒரு காக்கை தொட்டுவிட்டால் அதுவும் தீய சகுனம் நமக்கோ நமது குடும்பத்தாருக்கும் ஏதோ ஒரு ஆபத்து நிகழ்வதற்கான அறிகுறியாகும்.
அதேபோல வெள்ளை காகங்கள் காகங்களை பார்ப்பது ஜோதிட கணிப்பின்படி ஒரு தீய சகுனத்தை குறிப்பதே ஆகும். குறிப்பாக ஒரு வெள்ளை காகம் ஆனது தனியாக தென்பட்டால் அது நாட்டிற்கும் தீய சகுனத்தை குறிப்பதே ஆகும் என்று ஜோதிட கணிப்பு சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதனைத் தொடர்ந்து மணி காக்கை என்று கூறப்படும் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட காக்கைகள் வீட்டில் அமர்ந்து கரைவது நல்ல சகுனத்திற்கு உகந்ததாகும். மணி காகம் ஒருவரது வீட்டிற்கு வருவது அந்த வீட்டின் நல்ல வளர்ச்சியை குறிக்கிறது.
அதாவது அந்த காகம் தினமும் வீட்டிற்கு வர வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடங்கல் இல்லாமல் நடைபெறுவதில் தொடங்கி வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலை தருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |