இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் போதும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்
இந்துமதத்தில் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படியாக, நாம் வீடுகளில் வளர்க்கும் செடிகளும் வாஸ்து ரீதியாக தொடர்புடையது. அந்த வகையில் வீடுகளில் இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் போதும் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட செடி எது என்று பார்ப்போம்.
இந்து மதத்தில் துளசி செடிக்கு பல முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே போல் துளசி செடிக்கு நிகராக பல தாவரங்களும் இருக்கிறது. அதில் ஒன்று தான் சங்கு பூ. சங்கு பூ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அதோடு இந்த பூ சனி பகவானுக்கு மிகவும் பிடித்தது என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த செடியை நாம் வீடுகளில் வளர்க்கும் பொழுது நேர்மறை ஆற்றல் சூழ்ந்து வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்கிறார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சங்கு பூ கொடியை நட்டு, இந்த கொடியின் மலரும் பூக்களை கொண்டு வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும், அமைதியும் உண்டாக்கும்.
இந்த சங்கு பூ இரண்டு வகையில் இருக்கிறது. ஒன்று நீலம் மற்றொன்று வெள்ளை. ஜோதிடத்தின் படி, விஷ்ணு, சங்கரர் மற்றும் சனி பகவான் ஆகியோர் இந்த மலரால் பூஜை செய்யப்பட்டால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நம் வீடுகளில் சங்கு பூவை நடும் பொழுது அதை சரியான திசையில் நடவேண்டும். அப்படியாக, சங்கு பூவை வீட்டில் நடவிரும்புபவர்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் நடுவது சிறந்தது என்று வாஸ்து சாஸ்திரம் நம்புகிறது.
அல்லது, சங்கு பூ கொடியை வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலும் நடலாம். வீட்டின் வடகிழக்கு பகுதி ஈசான மூலை என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கு என்பது கடவுளின் திசை என்று நம்பப்படுகிறது.
கடவுள் இந்த திசையில் தான் வசிக்கிறார் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதனால் இந்த திசையில் நடுவது நமக்கு மிக சிறந்த பலனை கொடுக்கும். வீட்டில் தேவை இல்லாத சண்டைகளால் அவதிப்படுபவர்கள் செடியை வீட்டின் தென்மேற்கு முலையில் நடலாம்.
இதனால் வீட்டில் உள்ள குடும்ப பிரச்சனைகள் குறைவதுடன், வீட்டில் உள்ளவர்களுக்கு மன அமைதியும் கிடைக்கும். கடன் தொல்லைகளால் துன்பப்படுபவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சங்குப்பூவை ஹனுமன் பாதத்தில் வைத்து வழிபாடு செய்வது அவர்களுக்கு பண நெருக்கடிகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |