வாஸ்து: பாம்பு செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படியாக, வாஸ்து சரியாக அமைய வீட்டில் செல்வ செழிப்புகள் உண்டாகும். அதே வாஸ்து குறைபாடுகள் இருந்தால் வீட்டில் பல நிதி நெருக்கடிகள் உண்டாகும்.
அந்த வகையில் வாஸ்து குறைபாடுகள் நீங்க வீடுகளில் சில மாற்றங்கள் செய்வோம். அதில் முக்கியமான ஒன்று வீடுகளில் செடிகள் வளர்ப்பது. பொதுவாக வீட்டில் செடிகள் வளர்ப்பது என்பது அழகான விஷயமாக இருந்தாலும், அவை வாஸ்து ரீதியாக பல நன்மைகள் கொடுக்கிறது.
சான்செவிரியா அல்லது டிராகேனா டைபாசியாட்டா என்றும் அழைக்கப்படும் இந்த செடியின் இலைகள் அடர் பச்சை நிறத்தில் அடர்த்தியாகவும் கூர்மையாகவும் இருக்கும். இந்த செடிகளை தொழில் செய்யும் இடங்களிலும், சில வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் அதிகம் பார்க்க முடியும்.
இந்த செடிகள், பாம்புகளை போன்று வளைவு, நெளிவுடன் காணப்படுபதால் இது பாம்பு செடி என்று அழைக்கப்படுகிறது. இந்த செடியின் விஷேசம் என்னவென்றால், இந்த செடி காற்றைச் சுத்திகரித்து, இரவிலும் கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றுகிறது.
ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற காற்று மாசுபாடுகளை நீக்குகிறது. வாஸ்து படி இந்த செடியை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடி வீடுகளில் செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகும்.
ஆனால், பலரும் இந்த செடியை வளர்த்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியாமல் இந்த செடியை அழகிற்காக வளர்த்து வருகிறார்கள். வாஸ்துப்படி இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக பெரிய நன்மைகள் வழங்கும் என்பது தான் உண்மை.
இந்த செடிக்கு குறைந்த நீர் மற்றும் வெளிச்சம் இருந்தாலே போதுமானது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பெறுகிறது. ஆக, மிகவும் எளிமையாக வளர்க்கக்கூடிய செடியை வீட்டில் வளர்த்து வாஸ்து பிரச்சனைகளில் இருந்து விலகி நன்மை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |