வாஸ்து தோஷங்களை விரட்டி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சிலை- உடனே இதை செய்யுங்கள்

By Sakthi Raj Dec 20, 2025 05:34 AM GMT
Report

 ஜோதிடம் என்பது மனிதர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கும் இடத்தில் நிம்மதியாகவும் வாழ்வதற்கு வழி வகுக்கக் கூடியது. அப்படியாக வீடுகளில் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் வீடுகளில் ஏற்படக்கூடிய வாஸ்து தோஷங்களை அடியோடு விரட்டி அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் நல்ல ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான சிலை இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து தோன்றிய ஐந்து புனித பசுக்களில் காமதேனும் ஒன்று. இந்த காமதேனு பசு என்பது ஒருவர் கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு அற்புத தெய்வீக குணம் கொண்டது. மேலும் இது மகாலட்சுமி அம்சமாகவும் சனாதான தர்மத்தில் போற்றப்படுகிறது.

இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த சிலையை நம் வீடுகளில் வாங்கி வைக்கும் பொழுது வாஸ்து தோஷம் எல்லாம் விலகி வீடுகளில் ஆன்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

உங்களுக்கு இந்த தேதியில் தான் மரணம்? என்று துல்லியமாக கணிக்கும் அதிசய கோயில்

உங்களுக்கு இந்த தேதியில் தான் மரணம்? என்று துல்லியமாக கணிக்கும் அதிசய கோயில்

 

வாஸ்து தோஷங்களை விரட்டி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சிலை- உடனே இதை செய்யுங்கள் | Benefits Of Keeping Kamadhenu Statue At Home

அதிர்ஷ்டம் பெற செய்யவேண்டியவை:

நம்முடைய இந்திய மரபின்படி எல்லா பசுவும் காமதேனுவின் வடிவமாகவே நாம் அதனை போற்றி வழிபாடு செய்து வருகின்றோம். மேலும் பசுவும் கன்றும் இருக்கின்ற வீட்டில் பாலுக்கு எவ்வாறு பஞ்சம் இருக்காது, அதனால் அந்த வீடுகளில் செல்வ செழிப்புகள் நிறைந்திருக்கும். அதேபோல் தான் காமதேனும் அதனுடைய கன்று நந்தினி உடன் சேர்ந்து சிலைகளில் இருக்கும்.

இது தாய்மையின் அன்பையும் அடையாளத்தையும் தியாகத்தையும் நமக்கு எடுத்துரைப்பது போலும் அதனை போற்றும் வகைகளும் இருக்கிறது. மேலும், ஆன்மீக ரீதியாக பார்க்கும் பொழுது காமதேனுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் வாசம் செய்வதாக சொல்கிறார்கள். அதைவிட முக்கியமாக முப்பெரும் தெய்வங்களாக போற்றப்படும் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களும் அங்கு தான் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.

ஆக காமதேனு இருக்கும் இடத்தில் எல்லா தெய்வங்களுடைய அருளும் சகல சௌபாக்கியங்களும் அங்கு நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனாலே காமதேனுவை நாம் வழிபாடு செய்வதன் மூலம் முப்பத்து முக்கோடி தெய்வங்களுடைய முழு ஆசிர்வாதமும் நாம் பெறலாம் என்று சொல்கிறார்கள்.

வாஸ்து தோஷங்களை விரட்டி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சிலை- உடனே இதை செய்யுங்கள் | Benefits Of Keeping Kamadhenu Statue At Home

வாஸ்து: சமையலறையில் இந்த 5 பொருட்கள் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்

வாஸ்து: சமையலறையில் இந்த 5 பொருட்கள் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்

சிலை வாங்கு பொழுது கவனிக்க வேண்டியவை:

நாம் காமதேனு சிலையை வீடுகளில் வாங்கி வைக்க வேண்டும் என்று எண்ணுவது சிறந்தது. ஆனால் அதில் சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். அதாவது காமதேனு சிலையை நாம் எந்த உலோகத்தில் வாங்குகின்றோம் என்பது மிக மிக முக்கியமாக இருக்கிறது.

அதாவது ஒரு சில உலோகங்களில் செய்யக்கூடிய சிலையானது நமக்கு அந்த சிலையை வீடுகளில் வாங்கி வைப்பதற்குரிய பலன்களை தருவதில்லை. ஆதலால் வெள்ளியில் செய்யப்பட்ட காமதேனு சிலை நம் வீடுகளில் வாங்கி வைக்கும் பொழுது அது நல்ல ஒரு மன அமைதியை நம் குடும்பங்களுக்கு கொடுக்கிறது.

அது மட்டுமல்லாமல் வீடுகளில் யாருக்கேனும் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த தோஷ நிவர்த்தியும் நமக்கு பெற்று கொடுக்கிறது. அதுவே பித்தளையில் செய்யப்பட்ட காமதேனுவின் சிலையை நம் வீடுகளில் வைக்கும் பொழுது நம் வீடுகளில் ஐஸ்வர்யம் ஒன்றாக கூடி நமக்கு குருவின் அருளையும் பெற்று கொடுக்கக் கூடியதாக அமைகிறது.

அதை போல் செம்பு உலோகத்தில் செய்யப்பட்ட காமதேனு சிலையை வீடுகளில் வைக்கும் பொழுது நிச்சயமாக வாஸ்துவால் ஏற்படுகின்ற அனைத்து குறைகளும் நீங்கும். ஆனால், பிளாஸ்டிக் மற்றும் மண் போன்ற உடையும் பொருட்களில் இந்த சிலையை வாங்கி வைப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

வாஸ்து தோஷங்களை விரட்டி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சிலை- உடனே இதை செய்யுங்கள் | Benefits Of Keeping Kamadhenu Statue At Home

திசை:

இந்த காமதேனும் சிலையை வீடுகளில் வாங்கி விட்டோம் என்பதாலே நமக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போவதில்லை. இந்த சிலைகளை சரியான இடங்களில் வைத்தால் மட்டுமே அந்த சிலையானது வேலை செய்ய தொடங்கும்.

அப்படியாக வாஸ்து ரீதியாக காமதேனு சிலையை வீட்டினுடைய ஈசானிய மூலையில் அதாவது வட கிழக்கு திசையில் நாம் இதனை வைக்க வேண்டும். இந்த திசையில் தான் நீர் மற்றும் ஆன்மீக ஆற்றல் நிறைந்து இருக்கிறது.

ஆதலால் இங்கு வைக்கும் பொழுது தான் அதனுடைய முழு சக்தியும் இயங்கி நமக்கான நன்மைகளை செய்ய தொடங்குகிறது. அதேபோல் மறந்தும் தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இந்த காமதேனும் சிலையை நாம் வைக்கக் கூடாது. இவை எதிர்பாராத எதிர்மறை ஆற்றல்களை நமக்கு பெற்று தந்துவிடும்.

பலரும் அறிந்திடாத சக்திவாய்ந்த லிங்கம்- மார்கழி மாதத்தில் மட்டுமே காணலாம்

பலரும் அறிந்திடாத சக்திவாய்ந்த லிங்கம்- மார்கழி மாதத்தில் மட்டுமே காணலாம்

சில வைக்க உகந்த இடம்:

இந்த காமதேனு சிலையை நாம் தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களிலும் மேசையின் மீது வட கிழக்கு பகுதியில் சிறிய சிலையாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு சிலருக்கு எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் பாராட்டுக்களும் கிடைக்காத நிலையில் இருக்கும்.

அவர்கள் நிச்சயமாக இந்த காமதேனுவை வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் நினைத்த வாய்ப்புகள் அவர்களுக்கு தேடி வரும். அதோடு அவர்கள் உழைப்புக்கேற்ற நல்ல ஊதியம் கிடைக்கும். ஆக கேட்க கேட்க நமக்கு வரத்தை அளிக்கக்கூடிய இந்த அதிர்ஷ்டமான காமத்தை இன்னும் சிலையை வீடுகளில் வாங்கி வைத்து நாமும் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US