வீட்டில் குபேரன் சிலை வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

By Sakthi Raj Feb 04, 2025 07:02 AM GMT
Report

இந்து மத சாஸ்திரத்தில் பூஜை அறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.அதே போல் ஒருவர் வீட்டில் பூஜை அறை சரியான முறையில் வாஸ்து சாஸ்திரம் பார்த்து அமைப்பது கட்டாயம் ஆகும்.அப்பொழுது தான் வீட்டில் நிம்மதி,மகிழ்ச்சி பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.

அதே போல் வீட்டு பூஜை அறையில் நமக்கு பிடித்த சுவாமி படங்கள்,சிலைகள் வைத்து வழிபாடு செய்வோம்.அதிலும் குறிப்பாக செல்வ வளம் சிறப்பாக அமையும் வகையில் செல்வத்திற்கு அதிபதியான கடவுள் சிலையை வைத்து வழிபாடு செய்வோம்.

அந்த வகையில் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் சிலையை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாமா?அவ்வாறு வைத்து வழிபாடு செய்யும் பொழுது என்ன விஷயங்கள் எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

வீட்டில் குபேரன் சிலை வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் | Benefits Of Keeping Lakshmi And Kuberan At Home

பொதுவாக லட்சுமி தேவி கருணையின் வடிவமாக இருக்கிறார்.அவரை வழிபட நம்முடைய உடலில் நல்ல ஆரோக்கியமும் முகத்தில் நல்ல தெளிவும் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியும் இருக்கும்.அதேபோல்தான், குபேரன் செல்வத்தின் பாதுகாவலராகவும், யட்சர்களின் ராஜனாகவும் கருதப்படுகிறார்.

பிப்ரவரியில் பெருமாளின் முழு அருளை பெற்று பணக்கார யோகம் பெரும் 4 ராசிகள் யார்?

பிப்ரவரியில் பெருமாளின் முழு அருளை பெற்று பணக்கார யோகம் பெரும் 4 ராசிகள் யார்?

குபேரனை வழிபட பொருளாதாரத்திற்கு நல்ல வழியை காண்பிப்பார்.அவரை முறையாக தொடர்ந்து வழிபட வீட்டில் கடன் தொல்லைகள் இல்லாமல் மகிழ்ச்சி உண்டாகும். அபப்டியாக .இந்த இரண்டு தெய்வங்களின் சிலைகளையும் பூஜை அறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது.

நம் வீட்டில் கடவுள் சிலையை வைத்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு முறையான வகையில் பூஜை மற்றும் நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்யவேண்டும். அதே போல் லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை இருக்கிறது.

வீட்டில் குபேரன் சிலை வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் | Benefits Of Keeping Lakshmi And Kuberan At Home

அன்றைய தினம் லட்சுமி தேவியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும்.அதனால் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை மனதார வழிபாடு செய்து விளக்கு ஏற்றி லட்சுமி ஸ்தோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்வது சிறந்தது.அதேபோல் வியாழக்கிழமை குபேரனை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

அன்றைய தினம்,குபேர மந்திரங்களை சொல்லி வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பூஜை அறையில் சிறந்த முறையில் வழிபாடு செய்து வர எந்த ஒரு தடங்கலும் உங்களை நெருங்காது.எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும் உங்களுக்கு இறைவன் துணை நின்று பாதுகாப்பாக இருப்பார்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US