மயிலிறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Yashini Apr 17, 2024 12:52 PM GMT
Report

மயில் எனது ஓர் அழகியான பறவை. அதுவும் மழை வரும் நேரத்தில் தொகை விரித்து ஆடுவதை பார்ப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். 

மயில் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வரக்கூடியது முருகப்பெருமானின் வாகனமும், ஸ்ரீகிருஷ்ணரின் கிரீடத்தில் இருக்கும் மயிலிறகும்தான்.

அந்தவகையில், பெரும்பாலானோர் வீடுகளிலும் சிலர் அழகுக்காகவும், சிலர் வாஸ்து சாஸ்திர பலன்களுக்காகவும் மயிலிறகை வைத்திருப்பார்கள்.

மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். கண் திருஷ்டி, பில்லி, சூன்யம் போன்றவை விலகும்.

மயிலிறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Keeping Peacock At Home

அந்தக் காலத்தில் அரசர்கள் பயன்படுத்திய மயிலிறகு விசிறியிலிருந்து வரும் காற்றுக்கு மருத்துவ குணம் உள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் கூறுகிறார்கள்.

மயிலிறகை நம் வீட்டில் வைப்பதால் எந்த ஒரு விஷப்பூச்சிகளும் வராது. பாம்பு, பல்லி போன்றவையும் வராது.  

மயிலிறகு வீட்டில் இருந்தால், முருகனுடைய அருளும், ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளும் வீட்டில் பரிபூரணமாக இருக்கும்.

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் தெரியுமா?

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் தெரியுமா?

இது வீட்டில் இருப்பதால் செல்வச் செழிப்பு, லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டிலுள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும்.

சாம்பிராணி போடும்போதும் மயிலிறகை சிலர் பயன்படுத்துவார்கள். இதனால் திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது.

பள்ளிவாசலில் ஜபித்துவிட்டு மயிலிறகை தலையில் தடவி விடும் பழக்கம் இன்றும் உள்ளது. இதனால் தீய சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US