விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் தெரியுமா?

By Yashini Apr 16, 2024 01:45 PM GMT
Report

வினோதமான முக அமைப்பை, உருவங்களை உடைய நாயகன் விநாயகன் ஆவர்.

காலங்காலமாக விநாயகரை வணங்கும்போது தோப்புக்கரணம் போட்டு வணங்கவேண்டும் என்று கூறுவார்கள்.

தோப்புக்கரணம் என்றால் கைகளால் காதுகளைப் பற்றிக் கொண்டு, விநாயகர் முன் செய்யும் ஒருவகை வழிபாடு. 

நெற்றி பொட்டில மூன்று முறை குட்டிக்கொண்டு வலக் கையால் இடக்காதையும், இடக்கையால் வலக்காதையும் பிடித்து மூன்று முறை உட்கார்ந்து எழுந்து நிற்பதுதான் தோப்புக்கரணம்.

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் தெரியுமா? | Thorpikarnam Aanmiga Kaaranam In Tamil

விநாயகரிடம் முதன் முதலாக தோப்புக்கரணம் போட்டது சாட்சாத் ஸ்ரீமகாவிஷ்ணுதான்.

ஒருமுறை மகா விஷ்ணுவோட சக்ராயுதத்தை விநாயகப் பெருமான் விளையாட்டாக விழுங்கி விட்டார்.

இரண்டு நந்திகள் உள்ள சிவன் கோவில்: எங்கு உள்ளது?

இரண்டு நந்திகள் உள்ள சிவன் கோவில்: எங்கு உள்ளது?

விநாயகரிடமிருந்து அதை வாங்க மகாவிஷ்ணு தோப்புக்கரணம் போட்டார்.

வித்தியாசமான இந்தச் செயலைப் பார்த்த பாலவிநாயகர் விழுந்து விழுந்து சிரிக்க, சக்ராயுதம் வெளியே வந்து விழுந்தது.

மகாவிஷ்ணு மகிழ்வாக அதை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் விநாயகரை மகிழ்விக்க புது வழிபாட்டு முறையாக இதை நாம் பின்பற்றுகிறோம்.

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US