இரண்டு நந்திகள் உள்ள சிவன் கோவில்: எங்கு உள்ளது?
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது.
மூலவர் சுக்ரீஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளார். வலது புறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார்.
எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் உள்ளார்.
இந்த கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இருக்காது.
கோவில் நந்தி அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்ததை பார்த்து ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மாட்டின் காதையும் கொம்பையும் அறுத்துள்ளார்.
மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த விவசாயி தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி பகவான் என தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கி உள்ளார்.
பின் தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளனர்.
மறுநாள் வந்து பார்த்தபோது பழைய நந்தி முன்பும் புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.
சிவ பகவான் விவசாயியின் கனவில் வந்து உறுப்புகள் இல்லை என்றாலும் அதுவும் உயிர்தான் எனவும் பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும் மற்றது பின்னால்தான் எனக் கூறியதாக வரலாறு.
இதனால் இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில் இரண்டு நந்திகள் சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |