இளநீரில் விளக்கு ஏற்றும் அதிசய குகை கோவில்
12 ஆம் நூற்றாண்டில் இந்த காட்டில் நூரொந்து சாமி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டியில் நூரொந்து சாமி குகை கோயில் ஒன்று உள்ளது.
இந்த நூரொந்து சாமி கோயிலுக்கு செல்லும் மலை பாதை சற்று பயங்கரமாகவே இருக்கும்.
பொதுவாக கோயில்கள் என்றாலே எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதுதான் வழக்கம்.
ஆனால் இந்த நூரொந்து சாமி குகை கோயிலில் இளநீர் கொண்டு விளக்கேற்றுவது தான் வழக்கம்.
இந்த இளநீர் விளக்கை 800 ஆண்டுகளாக இந்த முறையில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இளநீரை வாங்கிச்செல்லும்பொழுது கோவில் பூசாரி விளக்கை துடைத்து அதில் இளநீரை ஊற்றி திரியை அந்த இளநீரில் நனைத்து தீபம் ஏற்றுகிறார்.
இதனை பார்பதர்க்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |