மாலையில் அரசமரத்தடியில் தீபம் ஏற்றுவதால் இத்தனை நன்மைகளா?
நம்முடைய இந்து மதத்தில் அரசமரத்தை தெய்வத்திற்கு இணையாக போற்றி வழிபாடு செய்கின்றோம். அதாவது அரசமரத்தில் பல கடவுள்கள் வாசம் செய்வதாக ஐதீகம். குறிப்பாக, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அரச மரத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
மரத்தின் வேரில் விஷ்ணுவும், தண்டுப் பகுதியில் சிவனும், மேல் பகுதியில் பிரம்மாவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு அற்புதம் வாய்ந்த அரசமரத்தடியில் சனிக்கிழமைகள் தோறும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றினால் சனிபகவானின் அருள் பெற்று அவரின் தீய தாக்கங்கள் குறையும் என்று சொல்கிறர்கள்.
அதிலும் குறிப்பாக ஏழரை சனி மற்றும் கண்ட சனி தொல்லைகளில் இருந்து நாம் விடுபடலாம் என்கிறார்கள். ஆனால், நாம் விளக்கு ஏற்றுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
சனிக்கிழமை அரசமரத்தடியில் விளக்கு ஏற்றவேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் அரச மரத்தடியில் விளக்கு ஏற்றி விடவேண்டும்.ஆனால், மாலை 8 மணிக்கு மேல் விளக்கு ஏற்றுவது அவ்வளவு உகந்தது அல்ல என்கிறார்கள்.
அதே போல் விளக்கு ஏற்றிய பிறகு உடனே அங்கு இருந்து கிளம்பி விடக்கூடாது என்கிறார்கள். சனிபகவானின் தாக்கமும், கெட்ட பலன்களும் குறைய சனி சாலிசா பாடலை படிக்க வேண்டும்.
அதே சமயம் விளக்கு ஏற்றும் பொழுது வாசனை திரவியங்கள் கலந்த எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றக்கூடாது. நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவதே சிறந்த பலனை கொடுக்கும். இவ்வாறு ஏற்றும் பொழுது நவகிரகங்களின் பாதிப்புகளும் குறைகிறது.
முடிவாக விளக்கு ஏற்றிய பிறகு நாம் அரசமரத்தடியை சுற்றி வந்து பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |