கார்த்திகை மாதத்தில் நினைத்தது நடக்க செய்யவேண்டிய மஞ்சள் பரிகாரம்
கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு மிகுந்த ஆன்மீகம் நிறைந்த மாதம்.அப்படியாக இந்த மாதத்தில் இறைவழிபாடு மேற்கொண்டு விரதம் இருந்து தானம் செய்தால் நமக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.இந்த மாதத்தில் சிவபெருமான்,விஷ்ணு,துளசி மாதா ஆகியோரை வழிபாடு செய்வதற்கு உகந்த மாதம் ஆகும்.
அப்படியாக நமக்கு ஏற்பட்ட பிரச்சனைகள்,துன்பங்கள் பண கஷ்டம் விலக நாம் செய்யவேண்டிய மஞ்சள் பரிகாரத்தை பற்றி பார்ப்போம். சிலருக்கு என்னதான் கடினமாக உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன் கிடைப்பது இல்லை.
அப்படியானவர்கள் இந்த கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் முடிச்சு மாலையை சாற்றுவதின் மூலம் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் வீட்டில் மஞ்சள் கட்டியை சிவப்பு துணியில் வைத்து தினமும் வழிபடலாம்.இவ்வாறு செய்யும் பொழுது லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
வீண் பண விரயம் ஏற்படாது.மேலும் சிலர் கடன் பிரச்சனையால் நீண்ட நாள் அவதிக்குள்ளாவார்கள்.அவர்கள் அரிசியில் மஞ்சள் கலந்து ஒரு சிவப்பு துணியில் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைக்க அவர்கள் கடன் சுமையில் இருந்து விரைவில் விடுபடுவதோடு எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கும்.
கார்த்திகை மாதத்தில், துளசி செடிகளுக்கு ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து, தண்ணீரில் மஞ்சள் கலந்து,துளசி செடியில் வைக்க மங்கள பலன்களைப் பெறலாம் மற்றும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மேலும் நாம் சுபகாரியங்கள் செய்யும் வேளையில் அதில் ஏதேனும் தடங்கல் ஏற்படாமல் இருக்க விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் திலகம் தடவி நாமே திலகம் செய்யலாம்.இவ்வாறு செய்யும் பொழுது விஷ்ணு பகவான் மனம் மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |