ஆடி மாத பொங்கல் வழிபாடு.. பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்கள்

By Sakthi Raj Jul 23, 2026 04:30 AM GMT
Report

 பொதுவாக, கோவில்களில் நம்முடைய வீடுகளில் ஏதேனும் முக்கிய விசேஷம் நேர்த்திக்கடன் என்றால் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக அம்மன் கோவில் என்றாலே அங்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான மாற்றங்களை கொடுக்கும்.

அதிலும், குறிப்பாக ஆடி மாதத்தில் எல்லா நாட்களிலுமே அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது என்பது மிகச் சிறப்பான பலனாக இருக்கிறது. அதேபோல், பக்தர்களும் இந்த மாதத்தை பயன்படுத்தி அவர்களுடைய நேற்று கடனை நிறைவேற்றுகிறார்கள்.

அப்படியாக ஏன் மற்ற உணவுகளுக்கு இல்லாத சிறப்பு இந்த பொங்கலுக்கு கிடைத்திருக்கிறது. அதனை பற்றி பார்ப்போம். நம்முடைய தமிழர் பாரம்பரிய பண்பாட்டில் பொங்கல் என்பது வெறும் உணவு மட்டுமல்ல அது இறைவனுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றி கடனாகவே பார்க்கப்படுகிறது.

ஆடி மாத பொங்கல் வழிபாடு.. பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்கள் | Benefits Of Offering Pongal To Amman In Aadi Month

12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?

12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?

நம்முடைய அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் பூமியின் விளைகிறது, மழை பெய்கிறது, சூரியன் ஒளி தருகிறது, மாடுகள் நமக்காக உழைக்கிறது, இறைவன் நமக்காக அருள் புரிகிறார். இத்தனை விஷயங்களுக்கு எல்லாம் நன்றி கூறும் மனநிலையில் பொங்கல் படைப்பு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

மேலும், பொங்கல் பொங்குவது என்பது நம்முடைய வீட்டில் வளம் பொங்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

அம்மனுக்கு ஏன் பொங்கல் படைக்கிறார்கள்?

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது என்பது ஒரு மரபாகவே உள்ளது. குறிப்பாக ஆடி மாதம் மற்றும் சில பகுதிகளில் மாசி மாதம் நடைபெறும் கிராமத் திருவிழாக்களிலும் இந்த வழிபாடு மிகுந்த பக்தியுடன் நடைபெறுகிறது.

குறிப்பாக தஞ்சாவூரை சுற்றியுள்ள பல கிராமங்களில் "மாரியம்மன் பொங்கல்" என்ற மரபு தொடர்ந்து கடைபிடித்து வரப்படுகிறது. அம்மான் என்பவள் தாயின் வடிவமாகவும், பூமியை பராசக்தி அம்சமாகவும் நாம் போற்றி வழிபாடு செய்கின்றோம். இந்த வகையில் பொங்கல் வழிபாடு செய்வது என்பது பஞ்சபூதங்களின் வழிபாடாகவே பார்க்கப்படுகிறது.

ஆடி மாத பொங்கல் வழிபாடு.. பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்கள் | Benefits Of Offering Pongal To Amman In Aadi Month

பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒன்றிணைந்து செய்யப்படும் பொங்கலை அம்மனுக்கு படைத்து வழிபடுவதால் அம்மன் மகிழ்ந்து நமக்கு அருளாசி வழங்குவார் என்பது நம்பிக்கை. நாம் சர்க்கரை பொங்கல் வைக்கின்ற பொழுது அரிசி, வெல்லம், நெய், பருப்பு என பலவிதமான பொருட்களை சேர்த்து பொங்கல் செய்வோம்.

இந்த ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு தனி தன்மையை உள்ளது. ஆனால், இவை எல்லாம் சேர்ந்து பொங்கலாக சமைக்கின்ற பொழுது இறுதியாக ஒன்றோடு ஒன்று கலந்து நமக்கு இனிப்பு சுவையை கொடுக்கிறது. அதை போல், தான் நம்மிடம் இருக்கக்கூடிய பலவிதமான குணங்களும் எண்ணங்களும் இருக்கின்றன.

நாம் இறைவனை முழுமையாக சரண் அடைந்து அவரிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும் பொழுது நமக்கு முக்தி என்ற பேரின்பம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இறைவனுக்கு நாம் பொங்கல் படைத்து வழிபாடு செய்கின்றோம்.

ஆடி மாத பொங்கல் வழிபாடு.. பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்கள் | Benefits Of Offering Pongal To Amman In Aadi Month

ஆன்மீகம்: பூனை அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வருகிறதா? இதை அலட்சியப்படுத்தாதீர்கள்

ஆன்மீகம்: பூனை அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வருகிறதா? இதை அலட்சியப்படுத்தாதீர்கள்

ஆடியில் பொங்கல் வைப்பது ஏன்?

வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய மாசி மற்றும் ஆடி மாதங்களில் அம்மனுக்கு பொங்கல் செய்து வழிபாடு செய்வதால் அம்மனுடைய மனம் மகிழ்ந்து நமக்கு அருள் ஆசி வழங்குகின்றாள். இந்த காலகட்டங்களில் நாம் வேண்டிய வரங்களை இறைவன் கொடுப்பார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இனிப்பான பொங்கலை அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்வதால் நமக்கு அம்மனுடைய பரிபூரண அருளால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் மறைந்து இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US