பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு என்ன மலர்கள் சாற்றினால் என்ன பலன் தெரியுமா ?

By Sakthi Raj May 28, 2026 09:06 AM GMT
Report

ஒருவர் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்ல வேண்டும் என்றால் கட்டாயமாக சிவபெருமானுடைய அருள் வேண்டும். காரணம், ஒருவருடைய பாவங்கள் தீர்ந்து கர்ம வினைகள் குறைந்தால் மட்டுமே அந்த நபர் வாழ்க்கையில் அடுத்த கட்டம் நகர்வை நோக்கி செல்ல முடியும்.

அப்படியாக, சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது அவர் நம்முடைய கர்ம வினைகளையும் பாவங்களையும் அழித்து புதிய மனித பிறப்பை எடுப்பதற்கு அவர் அருள் புரிகிறார். அந்த வகையில், சிவபெருமானை வழிபாடுசெய்வதற்கு மிகவும் உகந்த நாளாக பிரதோஷ தினம் இருக்கிறது. அதனால் சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும் பொழுது நினைத்த காரியம் நடக்கும்.

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு என்ன மலர்கள் சாற்றினால் என்ன பலன் தெரியுமா ? | Benefits Of Offerings Flowers To Shiva On Pradosha

12 வருட காலம் கஷ்டம் முடிவிற்கு வருகிறது.. குரு பெயர்ச்சியால் தலையெழுத்து மாறும் ராசிகள்

12 வருட காலம் கஷ்டம் முடிவிற்கு வருகிறது.. குரு பெயர்ச்சியால் தலையெழுத்து மாறும் ராசிகள்

பிரதோஷ வழிபாடு :

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தேதிகளில் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையில் ஆன நேரத்தில் பிரதோஷ நேரம் என்று சொல்கின்றோம். அதாவது சிவபெருமான் ஆலகால விஷயத்தை உண்டு உலகை காத்த நேரமான பிரதோஷ நேரத்தில் நாம் நந்தீஸ்வரருடன் சிவபெருமானை வழிபாடு செய்தால் நம்முடைய சகல பாவங்களும் நோய்க் கடன் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.

பிரதோஷ காலங்களில் சிவபெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அபிஷேகத்தில் நாம் கலந்து கொண்டால் நினைத்த காரியம் நடக்கும். அதேபோல் சிவபெருமானுக்கு பிரதோஷ தினத்தன்று நாம் படைக்கக் கூடிய ஒவ்வொரு மலரும் நமக்கு ஒவ்வொரு பலன்களை கொடுக்கிறது.

அப்படியாக, பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு என்ன மலர் சாற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு என்ன மலர்கள் சாற்றினால் என்ன பலன் தெரியுமா ? | Benefits Of Offerings Flowers To Shiva On Pradosha

மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள்

மகாபாரதம்: நம் வாழ்க்கையை வழிநடத்தும் கிருஷ்ண பகவானின் 7 பொன்மொழிகள்

 

பிரதோஷத்தன்று சிவனுக்கு படைக்கும் மலர்களும், அதன் பலன்களும் :

முல்லைப் பூ - கடன் தொல்லை விலகும்.

செம்பருத்தி பூ - பணசேர்க்கைஉண்டாகும்.

ரோஜா - திருமணம் கைக்குடி வரும்.

எருக்கம் பூ - மோட்சம் கிடைக்கும்.

தாமரை - சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

தும்பை பூ - தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும்.

அரளிப்பூ - மனதில் அமைதி உண்டாகும்.

மல்லிகைப் பூ - குடும்பத்தில் தம்பதிகள் இடையே ஒற்றுமை கிடைக்கும்.

பிச்சிப்பூ - எதிரிகள் விலகி செல்வார்கள்.

சங்குப்பூ - வறுமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US