கார்த்திகை மாதத்தில் நாம் கட்டாயம் படிக்கவேண்டியவை
நாம் அனைவரும் பகவத் கீதை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.மனிதன் வாழ்க்கையை நெறி படுத்த உதவும் இந்த பகவத் கீதை புனித காவியமாக பார்க்க படுகிறது.அப்படியாக தினமும் ஒருவர் பகவத் கீதை படித்து வர அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
நாம் இப்பொழுது ஒருவர் தொடர்ந்து பகவத் கீதை படிப்பதால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பற்றி பார்ப்போம். குருஷேத்திர போரில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் சொன்ன வாழ்க்கைப் பாடம் தான் இந்த பகவத் கீதை.
மஹாபாரத யுத்தம் நடக்கும் பொழுது பலம் மிகுந்த அர்ஜுனன் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை இழக்க நேரிடுகிறது.அப்பொழுது அவர் மனம் சலிப்படைந்து போரை நிறுத்த விரும்புகிறார்.
அந்த வேளையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய வாழ்க்கை செய்தி தான் பகவத் கீதை.இதை தினமும் படிப்பதால் வாழ்க்கையில் எண்ணற்ற சிறப்புக்ள உருவாகிறது.
1.ஒருவர் பகவத் கீதையை படிக்கும் பொழுது அவர்கள் கோ தானம் செய்த புண்ணியமும்,தினமும் படிக்கும் பொழுது யாகத்தில் சிறந்த அஸ்வமேத யாகம் செய்த பலனும் கிடைக்கிறது.
2.மேலும்,ஒருவர் கார்த்திகை மாதம் பகவத் கீதை படிக்கும் பொழுது அவர்களுக்கு பிறப்பு இறப்பின் தத்துவமும் வைகுண்டம் சேரும் வாய்ப்பும் கிடைக்கிறது.
3.வாழ்க்கையில் சமநிலை என்பது மிக முக்கியம்.அதை உணர்ந்தாலே மனிதனின் பாதி துன்பங்கள் விலகி விடும்.தினமும் பகவத் கீதை படிக்கும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கையை சமநிலையோடு எவ்வாறு கையாள்வது என்ற யுக்தி புரியவரும்.
4.மனிதனின் மிக பெரிய எதிரி அவனின் அறியாமை.மேலும்,அறியாமைஒரு மனிதனின் கண்களை மூடிவிடும்.அவர்களை தகுதி அற்ற அதர்ம பாதையில் கூட்டி சென்று விடும்.பகவத் கீதை படிப்பதால் ஒருவரின் அறியாமை விலகி மனிதன் பிறப்பை எவ்வாறு அணுகவேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.
5.மனிதன் சிறு விஷயத்திற்கும் மன சஞ்சலம் அடைவதுண்டு.அப்படியாக பகவத் கீதை ஒருவருக்கு வாழ்க்கையின் உண்மை நிலை உணர்த்தி பாக்குவப்படுத்துகிறது.மேலும் வரும் பிரச்சனைகளை தைரியமாக கையாள கற்று கொடுக்கிறது.
6.இறைவனை அடைய ஒரே வழி பக்தி.நம்பிக்கையோடு எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் வெற்றி அடையும் என்ற தன்னம்பிக்கையும் இறைவனை நம்பி ஒரு செயல் செய்ய அதில் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |