பூஜையில் எந்த இலையை வைத்து வழிபட்டால் எந்த கடவுளின் அருள் கிடைக்கும்?
வேத சாஸ்திரத்தில் மரங்கள், செடிகளோடு, இலைகள், தண்டுகள், பழங்கள், வேர்கள் போன்றவையும் புனிதமானவையாக கருதப்படுகின்றன.
அந்தவகையில், வழிபாட்டில் எந்த இலையை வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வாழை இலை
வாழை இலை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வாழை மரம் விஷ்ணுவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
புனிதமாக கருதப்படும் இந்த இலையின் மீது பிரசாதம் வைத்து கடவுளை வழிபடுகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, முதிர்ச்சியடைந்த வாழை மரத்தை வழிபட்டால் வியாழனின் ஆசி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
வெற்றிலை
காலம் காலமாக வெற்றிலை கடவுள் வழிபாடுகளில் பெரும்பாலும் இடம் பெறுகிறது.
வெற்றிலை பூஜைக்கு மட்டுமின்றி ஜோதிட பரிகாரங்களுக்காகவும் பயன்படுகிறது. வெற்றிலை புதன் கிரகத்துடன் தொடர்புடையது.
துளசி
விஷ்ணு வழிபாட்டில் துளசி முக்கிய இடம் வகிக்கிறது. பிரசாதமாகவும் துளசி இலை வழங்கப்படுகிறது. துளசி செடியால் வீட்டில் துக்கமும் துன்பமும் இருக்காது என்பது நம்பிக்கை.
மேலும், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை களைய துளசி நீரில் வீடு முழுவதும் தெளிக்கப்படுகிறது.
மா இலை
அனைத்து சுப காரியங்களுக்கும் வீட்டின் பிரதான வாசலில் மா இலை தோரணம் கட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
மா இலைகள் எதிர்மறையை நீக்கி நேர்மறையைப் பரப்பும் சக்தியாக பார்க்கப்படுகிறது. அதோடு மா இலையின் மங்கள சக்தி, சுப காரியங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.
வில்வ இலை
வில்வ மரம் மற்றும் அதன் இலைகள் சிவபெருமானுடன் தொடர்புடைய இலையாக கருதப்படுகிறது.
சிவ பூஜைகளில் இந்த இலைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
எருக்க இலை
சிவ பூஜையில் எருக்க இலைக்கு சிறப்பு இடம் உண்டு.
சிவபக்தர் எருக்களை இலையில் ஓம் என்று எழுதி சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்தால், சிவபெருமானின் அருள் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஷாமி இலை
வில்வ இலைகளைப் போலவே, ஷாமி இலைகளும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
வில்வ இலைகளை சமர்ப்பிப்பதை விட ஷாமி இலைகளை சமர்பிப்பது பல மடங்கு புண்ணியம் என்று கூறப்படுகிறது.
சிவனைத் தவிர, விநாயகருக்கும், நீதியின் கடவுளான சனிக்கும் ஷாமி இலை அர்ப்பணிக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |