உங்கள் வீட்டில் துளசி செடி உள்ளதா?அப்போ இதை கவனிக்க தவறாதீர்கள்

By Sakthi Raj Sep 05, 2024 12:30 PM GMT
Report

பொதுவாக இந்துக்கள் வீடுகளில் துளசி செடி என்பது கட்டயமாக வளர்க்கும் ஒரு செடியாக இருக்கிறது.பலரும் துளசி செடியை மகாலட்சுமிக்கு உகந்தது பெருமாளுக்கு உகந்தது என்று துளசியின் உண்மையின் மகத்துவம் தெரியமால் அந்த நல்ல விஷயத்தை வீட்டில் வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படியாக நாம் ஏன் வீட்டில் துளசி செடி வளர்க்க வேண்டும்?அதனால் என்ன பயன் என்று பார்ப்போம். முதலில் துளசி நம்முடைய மறுபிறவி அறுக்கும் என்று சொல்லுவார்கள்.

மேலும் நாம் எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்திருக்கிறதோ, அங்கே மும்மூர்த்திகளுடன், சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள் என்று பொருள்.

உங்கள் வீட்டில் துளசி செடி உள்ளதா?அப்போ இதை கவனிக்க தவறாதீர்கள் | Benifits Of Having Thulasi At Home

சூரியன் எப்படி உலகத்தின் இருளை விரட்டுகிறதோ,அதே போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும், நோய்களும் விலகிவிடும். துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவருக்கு சகல பாவங்களும் தொலையும்.

எவரது இல்லத்தில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலமாக கருதப்படுகிறது.

விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்


அந்த வீட்டில்,அந்த இடத்தில அகால மரணம், வியாதி முதலியன உண்டாகாது. நாம் எப்பொழுதும் துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்யவேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.

துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது. விஷ்ணு பூஜைக்குப்பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தை பிரசாதமாக பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும்.

இதைச் சரணாமிர்தம், தீர்த்த பிரஸாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர். இதைப்பற்றி ஆகமநூல், துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பு கிடையாது என்று சொல்லப்படுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US