நம்முடைய பாரத பூமியில் கடைபிடிக்க படும் ஆன்மீக கருத்துகள் பிற நாடுகளிலும் கடைபிடித்து வருகின்றனர்.அப்படியாக நம்முடைய இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையான சரஸ்வதி பூஜையை ஜப்பான் நாட்டிலும் கொண்டாடுகின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.
கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவி திகழ்கிறாள்.நம்மை போன்றும் ஜப்பானில் சரஸ்வதி தேவியை 'பென் சைட்டென்' என்று குறிப்பிடுகின்றனர். ஜப்பானில் வணங்கப்படும் ஏழு அதிர்ஷ்ட தேவதைகளில் இவரும் ஒருவர்.
மேலும் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார்.ஜப்பானில் பலவேறு இடங்களில் சரஸ்வதிக்கு என்று கோயில்கள் உள்ளது.அதாவது டோக் கியோ நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட, ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோயில்கள் அமைய பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டோக்கியோ நகர கோவிலில் உள்ள சரஸ்வதி, ஜப்பானிய உடை அணிந்து, தாமரைப்பூவின் மீது அமர்ந்திருக்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி, தன் கைகளில் ஒரு இசைக் கருவியை தாங்கியிருக்கிறார்.
அதிலும் 'பென்சைட்டென்' என்ற சரஸ்வதி மிகவும் விஷேசமான தெய்வமாக ஜப்பான் மக்களால் வழிபாடு செய்யப்படுகிறார்கள்.அதாவது அந்த பென்சைட்டென்' என்ற சரஸ்வதி மிகவும் சக்தி பெற்ற தெய்வமாகவும், ஜப்பானை காக்கும் தாயாகவும் அந்த மக்களால் போற்றப்படுகிறாள்.
அதற்கு காரணம்,ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதை காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்கள் நம்புகின்றனர். மேலும் கல்வி,செல்வம்,விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்து வர இவரை அங்குள்ள மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
நம்முடைய நாட்டில் நீர்நிலைகளை எவ்வாறு தெய்வமாக போற்றி வழிபாடு செய்கின்றமோ அதே ஜப்பான் நாட்டிலும் நீர் நிலைகளை கடவுளாக சரஸ்வதி தேவியாக பாவித்து வணங்கி வருகின்றனர்.
மிக முக்கியமாக ஜப்பான் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது, 'பென்சைட்டெனை வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ஷோட்டன்' எனவும், கருடன் 'கருரா' எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள்.
நம்முடைய நாட்டு மக்களை போல் ஜப்பான் நாட்டிலும் தங்களுடைய குழந்தைகள் கல்வி மற்றும் பிற முக்கிய துறைகளில் முன்னேற்றம் அடைய தொடர்ந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு இந்த வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டாலும் அதை அவ்வூர் மக்கள் இன்றும் நம்பிக்கையோடு வழிபட்டு வருவது அனைவரையும் ஆச்சிரயத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |