சரஸ்வதி பூஜை அன்று நாம் கட்டாயம் சொல்ல வேண்டிய மந்திரம்
ஒரு மனிதனுக்கு மிக பெரிய தைரியம் கொடுப்பது படிப்பு.அந்த படிப்பு பெற முதலில் நல்ல சூழல் ஒழுக்கமான மனநிலை இவை எல்லாம் அவசியம்.என்னதான் நிதானமாக சொல்லிக்கொடுத்தாலும் சில குழந்தைகள் படிப்பில் மற்றும் பிற விளையாட்டுகளில் கவனக்குறைவாகவே இருப்பார்கள்.
சிலர் என்னதான் கவனமாக முயற்சி செய்து படித்தாலும் அவர்களுக்கு கற்பதில் சிரமம் ஏற்படும்.அப்படியானவர்கள் கல்விக்கே அதிபதியான சரஸ்வதி தேவியை சரண் அடைய கல்வியிலும் பிற கலை துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
அந்த வகையில் சரஸ்வதி தேவிக்கு என்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விழா தான் சரஸ்வதி பூஜை.அன்றைய நாளில் சரஸ்வதி தேவியை விரதம் இருந்து வழிபாடு செய்ய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வருவதோடு கல்வியில் சிறந்து விளங்கலாம்.
மேலும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யும் பொழுது சில மந்திரங்கள் சொல்ல கூடுதல் பலன் கிடைக்கும்.ஏனென்றால் மந்திரத்துக்கு எப்பொழுதுமே தனி சக்தி உண்டு.அதை நாம் வாயார உச்சரிக்க நம்மில் பல மாற்றங்களை நாம் சந்திக்க முடியும்.
நாம் சரஸ்வதி பூஜை என்று இல்லாமல் தினமும் கூட இந்த மந்திரத்தை சொல்லிவர படிப்பில் சிறந்து விளங்கலாம்.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே
இந்த சகலகலாவல்லி மாலை பாடலை தினமும் மனதார படி வர நிச்சயம் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |