தமிழ்நாட்டில் உள்ள ஒரே சரஸ்வதி கோயில்

By Sakthi Raj Oct 11, 2024 10:00 AM GMT
Report

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி.அப்படியாக கட்டாயம் எல்லா கோயில்களில் சரஸ்வதி தேவிக்கு என்று தனி இடம் உண்டு.ஆனால் சரஸ்வதி தேவிக்கு என்று பிரத்யேகமாக தனி கோயில் இருப்பது பலருக்கும் தெரியாத தகவல்.

அப்படியாக நாம் இப்பொழுது சரஸ்வதி தேவிக்கு உள்ள தனி கோயிலை பற்றியும் அங்கு சென்று வழிபட நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான்.இங்கு பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி விஜயதசமி அன்று மிக சிறப்பாக நடைபெறும். படைப்பு கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி.

படிப்பு,பேச்சுக்கலை, எழுத்துக்கலை என கலைகளுக்கெல்லாம் கடவுளாகவும் சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார். மனிதனுக்கு சிறந்த அறிவாற்றல் என்பது மிகவும் அவசியம்.அது இருந்தால் தான் அவன் வாழ்க்கையில் ஜெயித்து அடுத்த கட்ட வாழ்க்கை நகர்த்த முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே சரஸ்வதி கோயில் | Koothanur Saraswati Temple

அப்படியாக அதை மக்களுக்கு அருள்புரிபவராக இருக்கிறார் சரஸ்வதி தேவி.இவருக்கு மிகவும் பிடித்த நிறம் வெண்மை.இவருக்கு தனி கோயில் இருப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று, திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்துக்கு அருகே கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு என தனிக்கோவில் உள்ளது.

முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் இக்கோவிலின் முன் மண்டபம் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.

மூலவராக இங்கு சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார். பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை தரிசிக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

ஆண்டிக்கோலத்தில் முருகரை எப்பொழுது தரிசனம் செய்யலாம்?

ஆண்டிக்கோலத்தில் முருகரை எப்பொழுது தரிசனம் செய்யலாம்?


இங்கு வீற்று இருக்கும் சரஸ்வதி தேவியை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து மக்கள் வருகின்றனர். இந்த ஊரை 2-ம் ராஜராஜ சோழன் தனது அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதாகவும், அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் கூத்தனூர் சரஸ்வதி தேவியை மகாகவி பாரதியார் தரிசனம் செய்து உளளார் என்பது தான்.கோவில் பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே சரஸ்வதி கோயில் | Koothanur Saraswati Temple 

சரஸ்வதி தேவிக்கு முன்னால் உள்ள அன்ன வாகனத்தில் நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். பள்ளியில் சேர்க்கும் முன்பாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு அழைத்து வந்து நெல் மணியில் 'அ' எழுத பழகி கொடுக்கிறார்கள்.

இதற்காக பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது. குழந்தைகள் கல்வியில் சிறக்க,மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க இங்குள்ள சரஸ்வதி தேவியை வந்து வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு என்று தனி கோயில் கூத்தனூரில் மட்டும் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆதலால் வாழ்நாளில் கட்டாயம் கல்விக்கு அதிபதியாக இருக்கும் சரஸ்வதி தேவியை வழிபட்டு எல்லாவற்றிலும் சிறந்து விளக்குவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US