ஜோதிடம்: தவறியும் இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள்
மனிதர்கள் தினமும் குளித்து தங்களை சுத்தமாக வைத்து கொள்வது என்பது அவசியம். அதனால் முடிந்தவர்கள் தினமும் தலை முடியும் அலசி குளித்து விட்டு செல்வார்கள். முடியாதவர்கள் முடிந்த நாட்களில் தலைக்கு குளித்து விட்டு செல்வார்கள். ஆனால் பெண்களுக்கு தலை முடி அதிகம் என்பதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே அவர்கள் தலைமுடியை அலசி கொள்வார்கள்.
அப்படியாக, நம்முடைய ஜோதிட சாஸ்திரம் பொருத்தவரைக்கும் நாம் எந்த நாட்களில் தலைக்கு குளித்தால் நல்லது எந்த நாட்களில் நாம் தலைக்கு குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
காரணம் குறிப்பிட்ட நாட்களில் நாம் தலைக்கு குளிக்கும் பொழுது கிரக நிலைகள் காரணமாக சில சங்கடங்கள் சந்திக்கலாம் என்கிறார்கள். அந்த வகையில் எந்த நாள் நாம் தலைக்கு குளிக்கலாம்? எந்த நாளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது என்று பார்ப்போம்.

திங்கட்கிழமை:
வாரத்தில் முதல் நாளாக இருக்கக்கூடிய திங்கட்கிழமை அன்று நாம் தலைக்கு குளிக்கிறோம் என்றால் அவை ஒரு நல்ல அதிர்வலைகளை நமக்கு கொடுக்கிறது. காரணம் திங்கட்கிழமை சந்திர பகவானுடன் தொடர்பு கொண்டது அது மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கு மிக உகந்த நாள் என்பதால் இந்த நாட்களில் நாம் தலைக்கு குளிப்பது என்பது நம்மை புத்துணர்ச்சி தந்து ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுடன் தொடர்பு கொண்டதால் இந்த நாள் சற்று ஆற்றல் அதிகம் நிறைந்த நாளாக காணப்படுகிறது. ஆதனால் இந்த நாட்களில் தலைக்கு குளிப்பதை சற்று தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். காரணம் இந்த நாளில் நம்மை அறியாமல் நம்முடைய மனமும் உடலும் சற்று அதிக வெப்பம் மற்றும் எரிச்சல் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம் என்கிறார்கள்.
புதன்கிழமை:
புதன்கிழமை புதன் பகவானுக்கு உரிய நாள் என்பதால் இந்த நாளில் கட்டாயமாக தலைக்கு குளித்து புத்துணர்ச்சி பெறலாம். இந்த நாள் தலைக்கு குளிக்கும் பொழுது மனமும் உடலும் சமநிலை அடைகிறது என்று சொல்கிறார்கள்.
வியாழக்கிழமை:
குருபகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை ஆகும். இந்த நாள் ஒருவர் அறிவு ஞானம் பெற மற்றும் திருமணம் அவர்களுடைய நல்ல செயல்களை செய்வதற்கு மிகச்சிறந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் நாம் தலைக்கு குளிப்பது என்பது குரு பகவானுடைய வலுவை குறைக்க கூடலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த நாளில் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது என்றும் சொல்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை:
ஒருவர் தலைக்கு குளிப்பதற்கு வெள்ளிக்கிழமை ஒரு மிகச் சிறந்த நாளாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை சுக்கிரபகவானுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் தொடர்பு கொண்ட நாளாக இருக்கிறது. இந்த நாளில் ஒருவர் தலைக்கு குளிக்கும் பொழுது அவர்களுக்கு அதீதமான ஒரு நல்ல அதிர்வலைகளும் அதிர்ஷ்டமும் அழகும் கூடுகிறது என்று சொல்கிறார்கள்.
சனிக்கிழமை:
சனிக்கிழமையும் நாம் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்பதால் இந்த நாளில் நாம் தலைக்கு குளிக்கும் பொழுது ஒரு சில தடைகளை அவை உண்டாக்க கூடும் என்பதால் இந்த நாளில் தலைக்கு குளிப்பதை தவிர்த்தால் தாமதங்களை தவிர்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாளாக இருக்கிறது. நிறைய நபர்கள் விடுமுறை காலம் என்பதால் இந்த நாளில் தலைக்கு குளித்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த நாளில் தலைக்கு குளிப்பதை தவிர்ப்பதால் சில உடல் ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |