சிவ மந்திரத்தை இந்த நேரத்தில் பாராயணம் செய்தால் 1000 மடங்கு பலன் கிடைக்குமாம்
சிவ வழிபாட்டில் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது என்பது நமக்கு பல மடங்கு பலனை பெற்றுக் கொடுக்கும். சிவபெருமானுடைய மந்திரங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய ஆன்மாவையும் நம்முடைய கர்ம வினைகளையும் அடியோடு அழிக்கக்கூடிய வல்லமை பெற்றது.
அப்படியாக, சிவ மந்திரங்கள் சொல்வதற்கு என்று உகந்த நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நாம் பாராயணம் செய்யும் பொழுது தான் நமக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் "ஓம் நமச்சிவாய" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை பிரம்ம முகூர்த்தமான காலை 4:00 மணி முதல் 6 மணி முதல் பாராயணம் செய்தால் நமக்கு மிகச் சிறப்பான பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதே போல், "மகா மிருத்யுஞ்சய" மந்திரத்தை அதே நேரத்தில் 11 முறை பாராயணம் செய்தால் நமக்கு எதையும் சாதிக்கக் கூடிய வலிமையும் போராடக்கூடிய தன்மையும் கிடைக்கும்.
மேலும், ருத்ராஷ்டகம் மற்றும் சிவதாண்டவம் ஆகியவற்றை மகா சிவராத்திரி அன்று எந்த நேரத்திலும் பாராயணம் செய்தாலும் சிவபெருமானுடைய அருளால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பவர்கள் உலக வாழ்க்கையில் உண்மையை அறிய நினைப்பவர்கள் சிவபெருமானுடைய மந்திரத்தை அவர்கள் பாராயணம் செய்கின்ற பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் சிவன் அருளால் உண்மை நிலையை அறிந்து கொள்ளக்கூடிய பாக்கியத்தையும் சிவபெருமானுடைய பரிபூரண அருளால் பெறுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |