நாளைய ராசிபலன் (20-08-2026)

Report

மேஷம்:

எதிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

ரிஷபம்:

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவதற்கான சூழல் அமையும். தந்தை வழி உறவுகளால் இருந்து வந்த கசப்புகள் விலகும். ஆறுதலும் நட்பும் கிடைக்கும்.

மிதுனம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். வியாபாரம் தொடர்பாக நீங்கள் புத்திசாலித்தனத்தோடு செயல்படுவீர்கள். இடப்பிரச்சினை விலகும்.

கடகம்:

இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். பெற்றோர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

ஒருவருக்கு நோய் தரக்கூடிய கிரகம் மற்றும் குணப்படுத்தக்கூடிய கிரகம் என்ன தெரியுமா?

ஒருவருக்கு நோய் தரக்கூடிய கிரகம் மற்றும் குணப்படுத்தக்கூடிய கிரகம் என்ன தெரியுமா?

சிம்மம்:

பொருளாதாரத்தில் மந்தமான நிலை உண்டாகலாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். வேலையில் கூடுதல் பொறுப்பு தேடி வரும்.

கன்னி:

சிறு தூர பயணங்களால் மனதில் தெளிவு உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அமைதியான நாள்.

துலாம்:

முடிவிற்கு வராத காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

நீண்ட நாள் எதிர்பார்த்த உதவிகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு பொறுமை அவசியம்.

தனுசு:

சுபகாரிய தொடர்பான அலைச்சல் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். வெளியே உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? வழிபாடு செய்யும் சரியான முறை என்ன?

2026: வரலட்சுமி விரதம் எப்பொழுது? வழிபாடு செய்யும் சரியான முறை என்ன?

மகரம்:

நீண்ட நாட்கள் சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களை இன்று சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்:

கற்பனை சார்ந்த சிந்தனைகள் உயரும். குழந்தைகளை பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விலகும்.

மீனம்:

மனதளவில் இருந்து வந்து குழப்பங்கள் விலகும். நீண்ட நாட்கள் தள்ளிப்போன காரியம் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட பணிகள் நீங்கள் நினைத்தது போல் நடக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US