பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கை துணை என்பவர்கள் மிகவும் அவசியம். அதற்கான காரணம், அவர்கள் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல நம்மை நாமே புரிந்து கொள்ள உதவக்கூடிய உறவையும் சேர்த்து தான் நாம் தேடுகின்றோம்.
அந்த வகையில், ஒவ்வொரு உறவுகளும் காதல் கதையாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை. சில உறவுகள் நமக்குள் இருக்கக்கூடிய சில அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. நாம் செய்யக்கூடிய தவறுகளை உணர்த்துகிறது. இது எல்லாம் பகவத் கீதையின் பார்வையில் நம்மை அறிந்து விழிப்புடன் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது.

நம்மைப் பிரதிபலிக்கும் உறவு:
நான் ஒரு சிலரை சந்தித்து இருப்போம். பார்த்த நொடியில் அவர்களுடன் நீண்ட காலம் பழகிய ஒரு அனுபவம் போல் தோன்றும். அவர்களுடன் ஒரு நல்ல ஈர்ப்பு இருக்கும். அதே நேரம் கருத்து வேறுபாடுகளும் மனக்குழப்பங்களும் வரும்.
அவர்களை பார்க்கும் பொழுது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் இருக்கும். உண்மையை சொல்லப்போனால் இந்த உறவுகள் எப்பொழுதும் நமக்கு நிம்மதியை தருவதில்லை. ஆனால், நம்மை நாமே எதிர்கொள்ளவும் உள்ளுக்குள் நம் ஆன்மாவை உணரச் செய்யவும் தூண்டுதலாக இருக்கிறது.
அதனால், இந்த காலகட்டங்களில் உணர்ச்சிகளில் அதிக அளவு மூழ்கி விடாமல் அந்த உறவுகள் காட்டும் பாடங்களை நாம் கற்றுக் கொள்வது அவசியம். உங்களை அந்த நபரின் வழியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இயல்பாக இணையும் உறவு:
மேலும் ஒரு சில உறவுகளை நாம் பார்க்கும் பொழுது அவர்களிடம் பேசும் பொழுது மிகவும் இயல்பாக இருக்கும். ஒரு நிம்மதி இருக்கும். ஒரு பரஸ்பர மரியாதையை உணரலாம். ஆழமான புரிதல் உண்டாகும். ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்ள இயலாமல் இருவரும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பக்குவம் கிடைக்கும்.
இவ்வாறான உறவுகள் எப்பொழுதும் நம்முடைய வளர்ச்சியை தடுப்பதில்லை. அந்த உறவுகள் இருவரும் வளருவதற்கான வழியை வகுக்குறது. மேலும், நீங்கள் இந்த உறவில் இருக்கக்கூடிய அன்பையும் எளிமையையும் மென்மையையும் மதிப்பதோடு உங்களுடைய தனித்தன்மையை பேணுவதோடு இருவரின் வளர்ச்சிக்கும் இடம் கொடுங்கள்.

பழைய சுழற்சிகளை உணர்த்தும் உறவு:
ஒரு சில உறவுகளை பார்த்திருப்போம். அவர்கள் மீண்டும் மீண்டும் நம்மை ஒரே மாதிரியான அனுபவங்களுக்குள் கூட்டி செல்வது போல் இருக்கும். அந்த நபருடன் தீவிரமான ஈர்ப்பு இருக்கும். ஆனால், மோதல்களும் ஏமாற்றங்களும் தீராத பிரச்சனைகளும் இருக்கும். சமயங்களில் இந்த விஷயம் ஏற்கனவே நடந்திருக்கிறது என்பது போன்ற உணர்வுகளையும் அவை கொடுத்து விடும்.
இவ்வாறு உறவுகளில் நீங்கள் இருக்கின்ற பொழுது சற்று விலகி இருங்கள். என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். உங்களை ஆழ்ந்த நீங்கள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய தவறுகளை புரிந்து கொள்வதற்கான ஒரு அற்புத வாய்ப்பாக இந்த உறவுகள் உங்களுக்கு இடம் கொடுக்கிறது.
கீதையின் பார்வையில் உறவுகள்:
உறவுகள் என்றாலும் நிச்சயம் அந்த இடத்தில் நம்மை அறியாமல் ஒரு பற்றுதல் வந்து விடுகிறது. ஆனால், ஒரு மனிதனுடைய வேதனைக்கும் வலிக்கும் ஏமாற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பது பற்றுதல் தான். இதைத்தான் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் பற்றின்மையோடு வாழ பழகுங்கள் என்று நமக்கு போதனை செய்கிறார்.
அப்படியாக, விழிப்புணர்வற்ற பற்றுதல் எப்பவுமே நமக்கு துன்பமே கொடுக்கிறது. விழிப்புணர்வுடன் அணுகக்கூடிய எந்த ஒரு விஷயமும் நமக்கு ஒரு நல்ல அனுபவமாகவும் ஞானத்தை தரக்கூடியதாகவும் இருக்கிறது என்று கீதை சொல்கிறது. ஆதலால், ஒரு உறவுக்கு இரட்டை ஆன்மா. ஆத்ம துணை, கர்ம உறவு என்ற பெயரிடுவதை காட்டிலும் அந்த உறவுகள் நமக்கு என்ன உணர்த்துகிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியம்.
சில நேரங்களில் அனுபவங்களால் நாம் சில விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். சில நேரங்களில் அனுபவம் இல்லை என்றாலும் நாம் விலகி நின்று சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். காதல் என்பது நமக்கான துணையை தேடுவது அல்ல. காதல் என்பது நம்மை நாமே தேடி செல்லக்கூடிய ஒரு பயணமாகவே இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |