கண் திருஷ்டி போக்கும் கருப்பு மீன்கள்
மனிதனிடம் தான் கெட்ட குணங்களும் நல்ல குணங்களும் நிறைந்து இருக்கிறது.ஒரு சிலருக்கு அவர்களை அறியலாமலே பொறாமை குணம் வெளி படும்.அவ்வாறு அந்த பொறாமை குணம் சமயங்களில் கண் திருஷ்டியாக மாறும் வாய்ப்புகளும் இருக்கிறது.இந்த கண் திருஷ்டியானது ஒருவரை எதிர்பாராத அளவு துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
உடல் நல குறைபாடு,பொருளாதார வீழ்ச்சி போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ள நேரிடும்.அதனால் தான் குடும்பகை எங்கேயும் வெளியில் சென்று வந்தால் சுத்தி போடவேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருந்தனர்.நாம் இப்பொழுது நமக்கு ஏற்பட்ட கண் திருஷ்டியில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது அதற்கான பரிகார முறைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடையவீட்டிற்கும் தொழில் செய்யும் இடத்திலும் வருபவர்களின் பார்வை நாம் கணிக்க முடியாது அப்படியாக அவர்களுக்கு கெட்ட எண்ணங்களே இருந்தாலும் அவர்களின் எண்ணங்களை,திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.
மேலும் வீட்டில் நிறைய பேர் மீன் வளர்க்கும் பழக்கம் வைத்திருப்பார்கள்.அவ்வாறு மீன் தொட்டியில் கருப்பு சிவப்பு போன்ற மீன்களை வளர்ப்பதால் திருஷ்டியில் இருந்து அவை நம்மை காப்பாற்றும். வாசலில் கற்றாழை,சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.
இதனால் சகல திருஷ்டி, தோஷம் நீங்கி செல்வ வளம், மனநிம்மதி மற்றும் மகிழ்ச்சி பெருகும். அமாவாசை,பௌர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் சாம்பிராணி புகையை காட்ட திருஷ்டி கழியும்.
வளர்பிறையில் வரும் செவ்வாய்,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.
முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டில் தெளித்தால் தீய சக்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |