சேமிப்பு அதிகரிக்க வங்கி கணக்கை இந்த நாளில் தொடங்குங்கள்

By Sakthi Raj Nov 12, 2024 07:00 AM GMT
Report

நாம் எந்த விஷயம் புதிதாக தொடங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான நல்ல நாள்,நேரம் பார்த்து தான் தொடங்குவோம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து தொடங்காத காரியம் தடங்களில் முடியும் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.

அப்படியாக நம்முடைய வாழ்க்கைக்கு மிக தேவையான நம்முடைய சேமிப்பை சேர்த்து வைக்க உதவுவது வங்கி கணக்கு.அந்த வங்கி கணக்கில் தான் நாம் நம்முடைய மாதம் மற்றும் வார சேமிப்பை சேர்த்து வைப்போம்.இன்னும் சொல்லப்போனால் அது தான் நம்முடைய பொருளாதார முன்னேற்றத்தின் மிக பங்கு வகிக்கும் முக்கியமான ஒன்றாகும்.

அப்படியாக அந்த வங்கி கணக்கு தொடங்கும் பொழுதும் நாம் சரியான நேரம் தேதி பார்த்து தொடங்குவது அவசியம்.அப்பொழுது தான் பொருளாதார சிக்கல் வராமல் நாம் சந்தோஷமாக வாழமுடியும். புதிதாக வங்கி கணக்கை துவங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழ கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள் அன்று தொடங்கலாம்.

சேமிப்பு அதிகரிக்க வங்கி கணக்கை இந்த நாளில் தொடங்குங்கள் | Good Day To Start A Bank Account

மேலும் இந்த வியாழன் கிழமையுடன், பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வர வேண்டும். பூரட்டாதி நட்சத்திரம் வரக் கூடிய வியாழன் கிழமையில் நீங்கள் புதிய வங்கி கணக்கு துவங்க,வற்றாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புத பூ

அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புத பூ

வங்கி கணக்கு இணையானது வீட்டில் நாம் உண்டியல் பணம் சேர்ப்பது.அவ்வாறு புதிதாக உண்டியலில் பணம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பூரட்டாதியும், வியாழன் கிழமையும் சேர்ந்து வரக் கூடிய குரு பகவானுக்கு உகந்த சக்தி வாய்ந்த இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை போட்டு சேகரிக்க துவங்கினால்,மேலும் மேலும் பணம் சேர்ந்து பொருளாதார ரீதியாக நல்ல முன்னிலையில் இருப்பீர்கள்.

எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் ஆனது நம் கையில் தங்கவேண்டும்.அப்பொழுது தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும்.அப்படியாக மேலும் பண சேர வியாழக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் தொடங்க பணம் கையை விட்டு போகாமல் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US