மனக்குழப்பத்தை நீக்க உதவும் பௌர்ணமி பரிகாரம்
பொதுவாக பௌர்ணமி நாளில் இந்த உலகத்தில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.
நாளைய தினம் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வரக்கூடிய ப்ளூ மூன் பௌர்ணமி வரவிருக்கிறது.
இது சாதாரண பௌர்ணமி நாளை(19-08-2024) காட்டிலும் அதிசக்தி வாய்ந்த பௌர்ணமியாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில், மனக்குழப்பம் நீங்க நாளையதினம் பௌர்ணமி வழிபாடு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
செய்யவேண்டிய பரிகாரம்
நாளை மாலை 6:30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு ஒரு கைப்பிடி அளவு நெல்மணிகளை ஐடத்து மாலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடவும்.
பின் இந்த நெல்மணிகளை இரண்டு கைகளிலும் ஏந்தி, சந்திர பகவானை மனதார நினைத்துக் கொண்டு, என்னுடைய மனக்குழப்பம் தீர வேண்டும், பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை கொடு என்று பிரார்த்தனை செய்யவேண்டும்.
பிறகு குலதெய்வத்தை வேண்டி இந்த நெல்மணிகளை அப்படியே ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்துவிடவும்.
பின்னர் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்தால், உங்களுக்கு மனமானது தெளிவு பெறும்.
வீட்டில் நிலா வெளிச்சம் வரும் எந்த இடத்திலும் 2 கைகளில் நெல்மணிகளை ஏந்தி கொண்டு சந்திர பகவானை பிரார்த்தனை செய்யலாம்.
பிரார்த்தனை முடிந்த இந்த நெல்மணிகளை மூன்று நாட்கள் கழித்து எடுத்து காக்கா குருவிகளுக்கு சாப்பிட இரையாக போட்டு விடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |