நாம் நிறைய வீடுகளில் பார்த்தால் தந்தை மகன் அல்லது தாய் மகள், தாய் மகன் இவ்வாறு பெற்றோர்களுடைய ராசி நட்சத்திரம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அமைந்திருப்பதை கவனிக்கலாம். இவ்வாறு அமையும் பொழுது அவர்கள் ஒரு பயத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.
ஜோதிட ரீதியாக இது எந்த அளவிற்கு அந்த குடும்பத்திற்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்று அச்சப்படுவார்கள். உண்மையில் இவ்வாறு ஒரே குடும்பத்தில் பெற்றோர்களுடைய ராசி நட்சத்திரம் பிள்ளைகளுக்கு வருவது நல்லதா அல்லது அது எந்த வகையான பாதிப்புகளை கொடுக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே பெற்றோர்களுடைய ஜீன்தான் நமக்கும் இருக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுடைய ராசி கட்டங்களை வைத்து ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் நிறைய இணைவுகள் ஒரே மாதிரி இருப்பதை நாம் பார்க்கலாம்.
ஆக வழி வழியாக இந்த விதியானது விதிக்கப்பட்டிருக்கிறது. நாம் எவ்வாறு மகன் அப்படியே அவருடைய அப்பாவை போலும், மகள் அப்படியே அவனுடைய அப்பாவை போல் என்று சொல்லுகின்றோமோ, இதற்கு வெறும் அவர்களுடைய முக பாவனையும் அவர்களுடைய அந்த ரத்த பந்தமும் மட்டுமே காரணம் அல்ல.
இதற்கு ஜோதிட ரீதியாகவும் நிறைய தொடர்புகள் இருக்கும். ஒரு வேலை இருவருக்கும் லக்னம் ஒன்றாக இருக்கலாம் அல்லது ராசி நட்சத்திரம் அல்லது கட்டங்களை எடுத்து பார்த்தோம் என்றால் கிரகங்கள் ஒரே மாதிரியான அமைப்பை பெற்று இருக்க கூடிய நிலை இருக்கலாம்.
ஆக மருத்துவ ரீதியாக எவ்வாறு ரத்த தொடர்புகள் இருக்கிறதோ அதேபோல் தான் ஜோதிட ரீதியாகவும் இந்த இணக்கமானது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை பார்த்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இது வாழ்க்கையில் ஒரு யதார்த்தமான நிகழ்வுகளே ஆகும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் வராது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |