ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

By Sakthi Raj Oct 29, 2026 09:09 AM GMT
Report

நம்முடைய இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் பெரியவர்களின் காலில் விழுந்து சிறியவர்கள் ஆசிர்வாதம் வாங்கக் கூடிய ஒரு பழக்கத்தை வைத்திருக்கின்றோம்.

அந்த வகையில், சாஸ்திர ரீதியாக ஒருவர் காலில் விழுகின்ற பொழுது நாம் ஒரு சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒருவர் காலில் நாம் விழுகின்ற பொழுது ஆசீர்வாதம் வாங்கக்கூடிய நபரின் கர்ம வினையின் ஒரு பகுதி ஆசீர்வாதம் செய்பவருக்கு சென்று சேர்கிறதாம்.

ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை | Can Everyone Touch Every Elders Feet For Blessings

ஜாதகத்தில் மாந்தி ஏற்படுத்தும் பிரச்சனை.. இந்த இடங்களில் இருக்கவே கூடாதாம்

ஜாதகத்தில் மாந்தி ஏற்படுத்தும் பிரச்சனை.. இந்த இடங்களில் இருக்கவே கூடாதாம்

இங்கு ஆசீர்வாதம் செய்யக்கூடியவர் ஒரு நல்ல இறையருள் கொண்டவராகவும் இறைவனுடைய துணை கொண்டு இருந்தால் கர்ம வினைகள் கழிக்க தெரிந்தவராக இருந்தால் அவர் அதிலிருந்து தப்பித்து விடுகிறார்.

அதை தவிர்த்து நாம் நம்முடைய காலில் எல்லோரும் விழ வேண்டும் என்ற ஆணவத்தில் இவ்வாறு செயல்படுகின்ற பொழுது நமக்கு வினைகளே வந்து சேர்கிறது.

ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை | Can Everyone Touch Every Elders Feet For Blessings

அதனால் துன்பமே வருகிறது. மேலும், தொப்புள் கொடி உறவாகிய தாய் தந்தை காலில் விழலாம். கோவில் கொடி மரத்திற்கு முன்பாக கீழே விழுந்து வணங்குவது மட்டுமே சிறப்பாக இருக்கிறது.

அதோடு, ஒருவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதற்கு முன்பாக அந்த நபர் நம்மை முழு மனதோடு எந்த ஒரு தீய எண்ணமும் இல்லாமல் ஆசீர்வாதம் செய்வாரா என்பதை நன்றாக தெரிந்து பிறகு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது அவசியமாக இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US