ஜோதிடம்:வீட்டில் உள்ள பழைய துணிகளை தானம் செய்யலாமா?
பொதுவாக வீட்டில் உபயோகித்த பொருட்களை நாம் திடீர் என்று உபயோகிக்காமல் போனால் அதை பிறருக்கு தானம் செய்வோம்.அப்படியாக பலரும் அடிக்கடி தானம் செய்யும் பொருட்களில் ஒன்று துணிகள்.நாம் கொஞ்ச நாள் உடுத்திய உடைகள்,பயன்படுத்தாமல் போக,அந்த உடைகள் அல்லது துணிகளை முடியாதவர்களுக்கு தானம் செய்வோம்.
பலருக்கும் ஒரு கூச்சம்,சந்தேகம் உருவாகும்.அதாவது,நாம் உபயோகித்து உடுத்திய பழைய உடைகளை பிறருக்கு தானம் செய்யலாமா?கூடாதா? என்று அதை பற்றி பார்ப்போம்.
நாம் வீட்டில் பழைய பயன்படுத்தாத சில பொருட்களை சேர்த்து வைக்க கூடாது.ஒன்று நாம் உபயோகம் செய்யவேண்டும்.இல்லை யாருக்கு உபயோகமாக அமையுமோ அவர்களுக்கு கொடுத்து விடவேண்டும்.
இவ்வாறு பழைய பொருட்கள் வீட்டில் சேர சேர அது வீட்டிற்கு ஒரு பாரம் சேர்ப்பதோடு.வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.அப்படியாக பழைய துணிகளை பிறருக்கு கொடுக்கும் பொழுது நாம் முக்கியமாக சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
அதாவது ஒரு பொழுதும் நாம் கிழிந்த துணிகளை பிறருக்கு கொடுக்க கூடாது.அதே போல் நாம் ஒருவருக்கு துணிகள் தானம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை நன்றாக தண்ணீரில் துவைத்து சுத்தமாக கொடுக்கவேண்டும்
காரணம்,பழைய பொருட்களாக இருந்தாலும் அதை பெரும் நபர்களின் மனம் குளிர வேண்டும்.அதே போல் ஒரு பொழுதும் நம்முடைய துணிகளை குப்பையில் போடக்கூடாது.அவ்வாறு செய்வது நமக்கு எதிர்மறை ஆற்றல் உருவாக்கும்.முடிந்த அளவு கிழிந்து உபயோகம் செய்யமுடியாத பொருட்களை தீயில் போடுவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |