அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்லலாமா?

By Sakthi Raj Jul 11, 2024 11:00 AM GMT
Report

அதாவது இறைவன் அவனை வழிபட மனம் சுத்தமாகும்.அதே போல் அவனை வழிபாடு செய்யும் பொழுதும் சுத்தமாக போகவேண்டும்.அப்படி இருக்க நம்மில் பலபேருக்கு அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா என்ற சந்தேகம் இருக்கும்.

அதை பற்றி பார்ப்போம்.

அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்லலாமா? | Can We Eat Non Veg While Going Temple Worship

சிலர் வாரம் ஒருமுறை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.சிலர் தினமும் கோயிலுக்கு செல்வார்கள்.இன்னும் சிலர் செவ்வாய் புதன் அல்லது சனி என்று அவர்களுக்கு பிடித்த நாட்களில் பிடித்த கடவுளுக்கு உகந்த நாட்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

ஆடி மாதத்தின் மகிமைகளும் சிறப்புகளும்

ஆடி மாதத்தின் மகிமைகளும் சிறப்புகளும்


சரி இப்பொழுது கோயிலுக்கு செல்லும் பொழுது அசைவம் சாப்பிடலாமா அப்படியே சாப்பிட்டு இருந்தாலும் சிலர் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வார்கள்.அப்படி செய்வது சரியா என்று பார்ப்போம்.

நம் எடுக்கும் உணவிற்கும் நாமும் தொடர்பு உண்டு.அதாவது பொதுவாக காரம் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் அதிகம் வரும் என்பார்கள்.பொங்கல் தயிர் போன்ற உணவை எடுத்து கொள்ளும் பொழுது உடல் அசதியாகி தூக்கம் வரும்.

அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்லலாமா? | Can We Eat Non Veg While Going Temple Worship

அதே போல் அசைவம் சாப்பிட்டால் மந்தம் ஆன சூழ்நிலை ஏற்படும். பொதுவாக நாம் கோயிலுக்கு செல்லும் பொழுது மந்தமான நிலையில் சென்றால் சுவாமியை தரிசிப்பதில் சற்று கவன சிதறல் ஏற்படும்.

மேலும் நாம் அசைவம் சாப்பிட்டு விட்டு செல்லும் பொழுது நம் மனதிற்குள்ளே சில சஞ்சலங்கள் உருவாகும்.

ஆதலால் இறைவனை அவனை வாழிபாடு செய்யும் பொழுது மனக்கவலைகள் இருந்தாலும் சுத்தமாக செல்வது மிக அவசியமாக கருதப்படுகிறது.

அப்பொழுது தான் கோயிலில் நிறைந்து இருக்கும் நேர்மறை எண்ணங்களை நம்மால் ஈர்க்க முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US