ஜாதகத்தில் சனி பகவான் அதிர்ஷ்டம் கொடுப்பார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு மனிதன் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் சாதகமாக இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதை பற்றி பார்ப்போம்.
சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் சாதகமாக இருக்கிறார் என்றால் உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய திறமைக்கேற்ற மதிப்பும் மரியாதையும் தேடி வரும். தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு தாமதம் தடை எதுவும் இல்லாமல் நீங்கள் நினைத்த வேலை உங்களுக்கு கிடைக்கும்.
உங்களின் பொருளாதாரம் எப்பொழுதும் உயர்ந்த நிலையில் இருக்கும். பெரும்பாலும் கடன் தொல்லையில் நீங்கள் சிக்க மாட்டீர்கள். நிலம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவில் பிரச்சனை இருக்காது.

நினைத்த காரியத்தை நினைத்து நேரத்தில் நடத்தக்கூடிய வலிமையை சனி பகவான் கொடுப்பார். உங்களுக்கு முன் கோபம் வராது வந்தாலும் நீங்கள் எந்த நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமோ அந்த நேரத்தில் சரியாக செயல்படுவீர்கள்.
சனி பகவானின் நல்ல பார்வையால் உங்களை எப்பொழுதும் ஒழுக்கமான வழியில் கூட்டிச் செல்வார். குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கை துணை உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். சமூகம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |