ஜோதிடம்: வீட்டு பூஜை அறையில் வெள்ளி பொருட்கள் பயன்படுத்தலாமா ?
நம் அனைவருக்கும் வெள்ளி மற்றும் தங்கம் போன்ற பொருட்கள் மிகவும் பிடித்தமானவை. அதனால், பலரும் வீடுகளில் பூஜை அறைகளில் வெள்ளி பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்வது உண்டு.
அப்படியாக, வீடுகளில் வெள்ளி பொருட்கள் வைத்து வழிபாடு செய்யலாமா? ஜோதிடம் சொல்வது என்ன? என்று பார்ப்போம்.
பொதுவாக வெள்ளி பாரம்பரிய ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும். சுப நிகழ்ச்சிகளில் இந்த வெள்ளி பொருட்களின் பயன்பாட்டை அதிகம் பார்க்க முடியும். அதாவது கோயில்களில் நடக்கும் பூஜைகளில் தொடங்கி வீடுகளில் நடக்கும் திருமணம் வரை வெள்ளி பொருட்கள் அதிகம் உபயோகம் செய்வோம்.
ஆக, ஜோதிட ரீதியாக வெள்ளி பொருட்கள் உபயோகிப்பதும், பயன் படுத்துவதும் மிக சிறந்த நன்மை வழங்குகிறது. அதாவது, சந்திரனுடனும் சுக்கிரனுடனும் வெள்ளிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சந்திரன் மனநிலையை பிரதிபலிப்பதாகவும், சுக்கிரன் செல்வத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுவதால், வெள்ளி அணிவது நேர்மறை ஆற்றலை உண்டாக்குவதோடு, மன அமைதியும் கொடுக்கும்.
அதனால், வீடுகளில் பூஜை அறையில் வெள்ளி பொருட்கள் வைப்பது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் கொடுக்கும். நாம் வெள்ளி விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் உண்டான சிக்கல் விலகி மன அமைதி கிடைக்கும்.
அதே, வெள்ளியில் ஆன கடவுள் சிலைகளை பூஜை செய்வதால், குடும்பத்தில் நலமோடும், செழிப்போடும் வாழ்வதற்கு வழி வகுக்கும். மேலும், வீட்டில் வெள்ளிப் பொருட்களை வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
இந்த திசைகளில் தான் செல்வம் மற்றும் ஆன்மீக சக்திகளை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், மறந்தும் வீட்டு மையப்பகுதியில் வெள்ளிப் பொருட்களை வைக்க கூடாது. இது சில தீமையை உண்டாக்கும்.
வெள்ளி பொருட்கள் உபயோகிப்பதை காட்டிலும் அதை பராமரிப்பது மிகவும் முக்கியம். அதாவது, வெள்ளி நகைகள் அல்லது பூஜைப் பொருட்களை சிவப்பு துணியில் சுற்றி வைத்தால், சந்திரனின் சக்தி வலுப்பெற்று, மன அமைதி கிடைக்கும்.
மேலும், வெள்ளியை சிவப்பு துணியில் கட்டி மேற்கு திசையில் வைக்கும்போது, வீட்டில் செழிப்பு பெருகி, நன்மைகள் அதிகரிக்கும்.
ஆக, முடிந்த அளவு சிறிய அளவில் வெள்ளி பொருட்கள் வாங்கி வைத்து பயன் படுத்த நம் வீட்டில் நன்மைகள் உண்டாகி செல்வம் பெருகவதோடு, நிம்மதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |