விதியை வெல்ல முடியுமா?
விதி வலியது என்பதை நாம் அறிவோம்.இந்த நேரத்தில் இந்த விஷயம் நடக்கவேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்க பட்டது.வேண்டாம் என்றாலும் விலகாது,வேண்டும் என்றாலும் கிடைக்காது வருவதை ஏற்று கொள்ள வேண்டும்.இது தான் விதியின் நியதி.
பறவையாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் விதி முன் அனைவரும் சமம் என்று உணர்த்தும் வகையில் ஒரு சிறிய சம்பவம் ஒன்று இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஒரு நாள் எமதர்ம ராஜா கண் அசைக்காமல் ஒரு குருவியை பார்த்தவாறு இருந்தார்.நமக்கு தான் எமன் என்றாலே பயம் அகிற்றே.அவர் வந்தால் கண்டிப்பாக உயிர் எடுக்காமல் போகமாட்டார் என்று உணர்ந்த கருடபகவான்,அந்த குருவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த குருவியை பல்லாயிரம் மைல் தூரம் தொலைவில் ஒரு மரப்பொந்தில் சென்று பத்திரமாக வைத்து விட்டார்.
ஆனால் கருட பகவான் வைத்த சற்று நேரத்தில் பொந்தில் இருந்த பாம்பு அந்த குருவியின் உயிரை பறித்துவிட்டது.இதை பார்த்த கருட பகவானுக்கு ஒரே வருத்தம்.நம்மால் ஒரு உயிர் போவிட்டதே என்று.பிறகு அந்த குருவி இறந்த துக்கத்தில் எமதர்ம ராஜாவிடம் வந்தார் கருட பகவான்.
அப்பொழுது வந்த கருட பகவானை எமதர்ம ராஜா கூர்ந்து கவனித்தார்.உடனே பதட்டம் அடைந்த கருட பகவான் "நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது. இதை கேட்ட எமதர்ம ராஜா,தாங்கள் என்னை தவறாக நினைத்து உள்ளீர்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு நான் அந்த குருவியை உற்று பார்த்ததற்கு காரணம்,அந்த குருவி இன்னும் சில நொடிகளில் வெகு தொலைவில் ஒரு மரப்பொந்தில் பாம்பு வாயால் இறக்கப்படும் என்று எழுதப்பட்டு இருந்தது.நானும் இந்த நிகழ்வு எவ்வாறு நடக்க போகிறது என்று சிந்தித்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அதற்குள் எப்படியோ எல்லாம் விதிப்படி நடந்து விட்டது என்று சொன்னார் எமதர்ம ராஜா. ஆதலால் இறைவன் அறிவான் எந்த நேரத்தில் என்ன நடவேண்டும் என்பதை.நாம் வெறும் வழிப்போக்கர்கள்.ஆதலால் எதை பற்றியும் சிந்திக்காமல் சந்தோஷமாக வாழ்வோம்.நடப்பவை நடந்தே தீரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |