தூர் மரணம் அடைந்தவர்களை வழிபாடு செய்யலாமா? கூடாதா ?

By Sakthi Raj Oct 13, 2026 12:09 PM GMT
Report

இந்துமதம் மட்டுமல்லாமல் எந்த ஒரு நாடுகளிலும் நம்முடைய குடும்பத்தில் முன்னோர்கள் இறந்து விட்டார்கள் அல்லது குடும்பத்தில் யாரேனும் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களை நினைத்து அவர்கள் இறந்த தினம், பிறந்தநாள் முக்கியமான நாட்களில் வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில், துர்மரணம் அடைந்தவர்களை வழிபாடு செய்யலாமா? கூடாதா? என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவர் திடீரென விபத்து, இயற்கை சீற்றம், எதிர்பாராத மரணம் ஆகியவற்றால் இறந்து விட்டார்கள் என்றால் அதனை நாம் துர்மரணம் என்று சொல்கின்றோம்.

அந்த வகையில், துர்மரணம் அடைந்தவர்களை கண்டிப்பாக நாம் வழிபாடு செய்யலாம். இல்லையென்றால் அவர்களுடைய ஆத்மா எளிதில் சாந்தி அடைவதில்லை.

தூர் மரணம் அடைந்தவர்களை வழிபாடு செய்யலாமா? கூடாதா ? | Can We Worship Who Died In Accident Or Sucide

ஒருவர் தலை எழுத்தையே மாற்றக்கூடிய ராகு பகவான்.. யாருக்கு அதீத நன்மை செய்வார்?

ஒருவர் தலை எழுத்தையே மாற்றக்கூடிய ராகு பகவான்.. யாருக்கு அதீத நன்மை செய்வார்?

மேலும், துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மா அதே இடத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அவர்கள் எந்த நேரத்தில் இறந்தார்கள், எந்த மனநிலையில் இறந்தார்கள், எப்படிப்பட்ட நேரத்தில் இறந்தார்கள் என்பதை எல்லாம் நாம் கவனிக்க வேண்டும்.

அவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அவர்களுடைய ஆத்மாவை சாந்தி அடைய செய்வது அவசியம். அதன் பிறகு அவர்களுக்கு ஒவ்வொரு அமாவாசை திதியிலும் வழிபாடு செய்யலாம்.

இவ்வாறு வழிபாடு செய்வது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மேலும், நம்மளுடைய சந்ததியினரை அவர்கள் எப்படி இறந்திருந்தாலும் அவர்களை வழிபாடு செய்வது என்பது நமக்கு நல்லதே நடக்கும் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US