2026: மகர ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரம் பொருத்தம்? எந்த நட்சத்திரத்தைத் தவிர்க்க வேண்டும்?

By Sakthi Raj Nov 12, 2026 01:35 PM GMT
Report

ஜோதிடத்தில் சனி பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் எதையும் தீர ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்கக் கூடியவர்கள்.

அந்த வகையில், ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள் மகர ராசியினருக்கு எந்த நட்சத்திரம் பொருத்தமான நட்சத்திரம் மற்றும் பொருத்தம் இல்லாத நட்சத்திரம் என்பதை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

உத்திராடம் நட்சத்திரம்:

இவர்களுக்கு மிருகசீரிடம், ஹஸ்தம் ஆகியோர் ஒரு நல்ல இணைவாக இருக்கிறார்கள். தொழில், சொத்து சேர்க்கை இவர்கள் இணையும் பொழுது சிறப்பாக அமைகிறது. அதே சமயம், ஆயில்யம் மற்றும் கேட்டை நட்சத்திரக்காரர்களை இவர்கள் தவிர்ப்பது நல்லது.

2026: மகர ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரம் பொருத்தம்? எந்த நட்சத்திரத்தைத் தவிர்க்க வேண்டும்? | Capricorn Nakshatra Compatibility

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

திருவோணம் நட்சத்திரம்:

இவர்களுக்கு திருமூலம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரங்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை பெற்றுக் கொடுக்கும். இவர்கள் மகம் நட்சத்திரக்காரர்களுடன் கவனமாக இருப்பது நல்லது.

அவிட்டம் நட்சத்திரம்:

இவர்களுக்கு திருவாதிரை, பூசம், சுவாதி மற்றும் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் மிகவும் நற்பலன்களை கொடுக்கிறார்கள். அதுவே பரணி கூறும் மற்றும் பூராடம் ஆகியவை ஒரு சில பாதிப்புகளையும் நெருக்கமின்மையையும் உருவாக்கலாம்.

மேலும், மகர ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரம் பலம் மற்றும் பலவீனமாக செயல்பட கூடியவர்கள் என்று ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US