உடலில் நோய் வருவதற்கான காரணம்

By வாலறிவன் Jul 24, 2024 05:17 PM GMT
Report

சிலருக்கு பரம்பரை பரம்பரையாக சில நோய்கள் வந்து கொண்டே இருக்கும், சிலருக்கு உடல் வாகு கூட அப்படித்தான் அமையும்.

குறைவாக உண்பர் குண்டாக இருப்பார், அதிகமாக உண்பர் மெலிந்து இருப்பார், பாட்டிக்கு இருந்த நோய்கள் அம்மாவுக்கு இருக்கும், அப்பாவுக்கு இருக்கும் நோய்கள் மகனுக்கு என கடத்தப்படும் இவையெல்லாம் கரு வழி தொடர்பு நோய்களாகும்.,

ஆரோக்கியமான மனிதரை பார்ப்பதே அபூர்வம் ஆகி விட்டது, சிறுவர்கள் கூட கண்ணாடி அணிந்துள்ளனர், முதியவர் படும்பாட்டினை விட இளசுகள் படும் அவஸ்தை சொல்லி மாலாது.

10 அடி கூட நடக்க முடியவில்லை, AC, FAN, இல்லாமல் இருக்க முடியவில்லை, படி ஏற முடியவில்லை, பயணம் செய்ய கூட உடல் ஒத்துழைக்கவில்லை, சிறிய காயம் ஏற்பட்டாலும் ICU ல் Admit ஆகும் அளவுக்கு பயம்.

உடலில் நோய் வருவதற்கான காரணம் | Cause Of Disease In The Body

இந்த நிலைக்கு உடலையும் மனதையும் தள்ளி வைத்து விட்டோம். இதற்கெல்லாம் அடிப்படை உடலை பற்றியும் மனதை பற்றியும் போதிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இல்லை நான் சரியாக தான் இருக்கிறேன் என்றால் உங்கள் உடல் ஏன் உங்கள் வசம் இல்லை?

இன்பம் துன்பம் இரண்டு உணர்ச்சிகள் உண்மையில் இல்லை இன்பத்தின் அளவு, நேரம், அதிகரிக்குமாயின் அது துன்பம்.

இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

எங்கிருந்து தோன்றுகின்ற தெனவாராய்ந்தேன்

இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு

இன்பத்தின் அளவுமுறை மாறும்போது

ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்

இன்பத்தின் மருபெயராம் துன்ப மாயும்

இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்

- வேதாத்திரி மகரிஷி   

சுவையாக உள்ளது என 1 லட்டு சாப்பிட்டால் இன்பம் அதே 8 லட்டு சாப்பிட்டால்??

எப்போதாவது Mobile பயன்படுத்தலாம் தேவைக்கு ஏற்ப, எப்போதும் அதிலேயே லயித்திருப்பது??

சில கருவுற்ற பெண்கள் அதிகமாய் கண்களை ஓய்வு இல்லாமல் தூங்கும் போது மட்டும் தான் மூடுவர். அப்படி இருக்க அவரது குழந்தைகள் சிறுவயதிலேயே பார்வை குறைபாட்டுடன் பிறக்கும்.  

ஆக இன்பத்தின் அளவு முறை அதிகாரித்தால் அதுவே துன்பமாக்கும்.

ஒரு Test செய்து பார்ப்போமா?    

சில வினாக்கள் விடுக்கிறேன், உங்கள் மனதில் உதிக்கும் பதில் பொருத்து உடல் உங்கள் வசம் உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

உடலில் நோய் வருவதற்கான காரணம் | Cause Of Disease In The Body  

வேலைக்கு போகும் மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு செல்லும் நாட்கள் தவிர்த்து குறித்த நேரத்தில் காலையில் எழ முடிகிறதா?

Positive Answer :- ஆம், எப்போதும் அதிகாலையில் எழுவேன்.

 கனவு இல்லாத இரவு தூக்கம் அனுபவிக்கிறீர்களா?

Positive Answer :- எனக்கு தூக்கத்தில் கனவு வருவது இல்லை 

கடைசியாய் மருத்துவரை பார்த்த நாள் நினைவுக்கு வராமல் யோசித்து இருக்கிறீர்கள்களா?

Positive Answer :- நியாபகம் இல்லை   

3 வேலை உணவு உண்டும் பசி அடங்காமல் நொறுவைகள் உண்டு வயிற்றை நிரப்பி இருக்கிறீர்களா? 

Positive Answer :- அப்படி உண்டது இல்லை  

இதற்கான பதில்கள் உங்கள் வசம் உங்கள் உடல் இல்லை என்பதை நிரூபித்து காட்டும். 

முக்கால்வாசி நோய்கள் உங்கள் உணவு பழக்கத்தாலும், உடலை வருத்துவதாலும் வருகின்றன .

உடலில் நோய் வருவதற்கு 3 காரணங்கள் உள்ளன   

1 - கரு வழி தொடர்பில் வந்த - வரும் நோய்கள்

2 - உடலை பற்றின அக்கறை இல்லாததால் வரும் நோய்கள்

3 - மன நிலை பாதிப்பால் வரும் நோய்கள் 

கரு வழி தொடர்பு  

சிலருக்கு பரம்பரை பரம்பரையாக சில நோய்கள் வந்து கொண்டே இருக்கும், சிலருக்கு உடல் வாகு கூட அப்படித்தான் அமையும் குறைவாக உண்பர் குண்டாக இருப்பார், அதிகமாக உண்பர் மெலிந்து இருப்பார், பாட்டிக்கு இருந்த நோய்கள் அம்மாவுக்கு இருக்கும், அப்பாவுக்கு இருக்கும் நோய்கள் மகனுக்கு என கடத்தப்படும் இவையெல்லாம் கரு வழி தொடர்பு நோய்களாகும்.

உடலில் நோய் வருவதற்கான காரணம் | Cause Of Disease In The Body  

உடல் பற்றின அக்கறை இல்லாமை   

ஒரு Plastic Cover ல் 20 ஆப்பிள்களை போட முடியும் எனும் போது 30 போட்டால் என்ன ஆகும், கிழிந்து போகும் அல்லவா.,

ஆனால் உங்கள் வயிற்றை பாருங்கள் 5 இட்லியும் சாப்பிட முடியும், சட்டினி சாம்பார் நன்றாக இருந்தால் 12 இட்டிலியும் சாப்பிட முடியும், இது போதாமல் போதைக்கு வசப்பட்டு உடலை வருத்தவும் செய்கிறீர் சிலர்,

பசி இல்லாத போதிலும் Taste காக சாப்பிடுகிறேன் என்பதும் போதை தான்,. ஒரு சிலர் உணவை வீணாக்க கூடாது என்று தின்று பின் தவளையை விழுங்கிய பாம்பை போல உருண்டு கிடப்பர், அதுவும் தவறு தான்.

தலைவலி, திடீர் ஜுரம், இருமல், தும்மல், உடல் வலி, இவையெல்லாம், உடலுக்கு போதுமான அளவை தாண்டி திணிப்பதன் பின்விளைவால் உடல் கெட்டுப்போகிறது.

மன நிலை பாதிப்பு

கோபமாக இருக்கும் போது,

வருத்தப்படும் போது,

பொய் கூறும் போது,

ஏமாற்றும் போது,

அழும் போது வஞ்சத்தை இருப்பு கட்டும் போது

விரக்தியில் அழும் போது

அதிகமாய் அடுத்தவரை பற்றி சிந்திக்கும் போது

பழிக்கும் போது

நடக்காததை நினைத்து சதா புலம்பும் போதும்   

உடலில் நோய் வருவதற்கான காரணம் | Cause Of Disease In The Body  

இந்த மன நிலையில் உங்கள் மனம் உச்ச கட்ட உயிர் ஆற்றலை செலவு செய்கின்றது Bike ல் Petrol காலியானால் எப்படி Automatic ஆக Reserved ல் இருந்து எடுத்துக்கொள்ளுமோ, அது போல இந்த மன நிலையில் எப்போதெல்லாம் நீங்கள் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் உடல் செலவுக்கு வைத்து இருக்கும் போதிய உயிர் சக்தியை தாண்டி இருப்பில் இருந்து செலவு ஆகும்.

அதனை சரி செயும் அளவுக்கு உங்கள் அறிவுக்கு பக்குவம் இல்லாததால் நோய் ஏற்படும்.

இப்படியாக நோய்கள் உங்கள் உடலில் தங்க யார் இடம் கொடுத்தது நீங்கள் தானே..

*மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் - வள்ளுவர் 

*உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...- திருமுலர் 

இப்படியாக நோய் ஏன் வருகிறது என ஒவ்வொரு ஞானியும், சித்தர்களும் எத்தனையோ கருத்துக்கள் கூறினும் நாம் அதையெல்லாம் மேடை பேச்சுக்களுக்காகவும், மற்றவர்களுக்கு உபதேசம் கூறுதற்காகவும் wats app insta status வைக்கவும் பயன்படுத்துறோமே தவிர நமக்காக பயன்படுத்துவது இல்லை.

பயப்பட வேண்டாம் இந்த 3 நிலைகள் இருந்தாலும் உடலை சரி செய்து புதுப்பிக்க முடியும், அது எப்படி என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US