சாணக்கிய நீதி: கோடீஸ்வரராக இந்த 4 விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமாம்
சாணக்கியர் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுப்பதிலும் அரசியல் வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை பற்றி நமக்கு தெளிவுபடுத்துவதிலும் மிகச்சிறந்த ஆசிரியர். அவர் மனிதர்கள் எந்த விஷயங்களை பின்பற்றினால் வாழ்க்கையில் மிக உயரமான நிலையை அடைந்து வெற்றி பெறுவார்கள் என்று நமக்கு எடுத்து சொல்லி இருக்கிறார்.
அப்படியாக ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கக்கூடியது பொருளாதாரம். மேலும் நாம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க சாணக்கியர் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
1. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அவனுடைய சோம்பேறி தனத்தை முதலாவதாக அவன் கைவிட வேண்டும். சோம்பேறியை கைவிட்டால் அவனுடைய இலக்கை நோக்கி உழைக்க தொடங்குவான். அந்த உழைப்பு அவனுக்கு வெற்றியையும் நல்ல பொருளாதாரத்தையும் பெற்றுக்கொடுக்கும்.
2. அதேபோல் நம் வாழ்க்கையில் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் வெற்றி அடையும் வரை அதனை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவசியம். நாம் நினைத்ததை சாதிக்கும் வரை ஒரு பருந்தை போல் நம் இலக்கை நோக்கிய பயணம் மட்டுமே இருக்க வேண்டும். எந்த ஒரு தடுமாற்றமும் கவன சிதறல் இருக்கக் கூடாது. நாம் செல்லும் பாதையில் தடைகளும் சவால்களும் வந்தாலும் அதை எதிர்த்து உடைத்து முன்னேறக்கூடிய சக்தி நம்மிடமிருக்க வேண்டும்.
3. ஒரு மனிதனுக்கு பொறுமை என்பது மிக அவசியம். இழப்பாக இருக்கட்டும் வெற்றியாக இருக்கட்டும் அவன் எப்பொழுதும் பொறுமையாக கையாள வேண்டும். பொறுமையாக இருந்தால் நாம் சிறப்பாக சிந்தித்து செயல்பட முடியும். பொறுமை இழந்து செயல்படும்பொழுது நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து விடுவோம். ஆதலால் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் வெற்றியை அடையவும் பொறுமை மிக அவசியம்.
4. மனிதனுக்கு தன்னம்பிக்கை அவனை உயர்த்தி கூட்டிச் செல்லும் ஒரு முக்கிய பண்பாகும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் இருந்தால் இலக்கை அவன் கட்டாயமாக அடைந்து விட முடியும். எப்பொழுதும் நம் மீதும் நம் திறமையின் மீதும் நாம் முழு நம்பிக்கை கொண்டு இருக்க வேண்டும். தோல்வியே வந்தாலும் நம் திறமையை கொண்டு மீண்டும் நான் எழுவேன் என்ற ஒரு தைரியம் இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







