சாணக்கியர் எச்சரிக்கை: மனிதர்கள் இவ்வாறு இருந்தால் கட்டாயமாக அழிவு நிச்சயமாம்
எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் வளரும் பொழுது வீட்டில் உள்ள பெரியவர்களும் பெற்றோர்களும் "நேர்மையே சிறந்த கொள்கையாகும்" இதை கடைபிடித்து வாழ வேண்டும் என்று சொல்லிகொடுத்திருப்பார்கள்.
ஆனால் புராண காலங்களில் வாழ்ந்த சாணக்கியர் என்ன சொல்கிறார் என்றால், இந்த உலகத்தில் யார் அதிகமாக நேர்மையை கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் தான் முதலில் தாக்கப்படுவார் என்பதாக அவர் சொல்லுகிறார்.
அந்த வகையில் உண்மையாக நேர்மையாக இருப்பதால் மனிதர்களுக்கு துன்பம் வருமா? அல்லது நேர்மைக்கு கிடைக்கக்கூடிய பரிசு என்ன? என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
சாணக்கியர் என்பவர் மனிதர்களை வழி நடத்துவதில் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருக்கிறார். இவர் வாழ்க்கைக்கு தேவையான தத்துவமாக இருக்கட்டும், ஆன்மீகம், குடும்பம், தொழில் என்று எல்லாவற்றுக்கும் ஒரு மனிதன் எவ்வாறு வாழ்ந்தால் அவன் வெற்றி அடைவான் என்பதற்கு பல வழிமுறைகளை அவர் நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்.

அப்படியாக சாணக்கியர் சொல்கிறார், ஒரு மனிதன் மிகவும் நேர்மையான மனிதனாக இருந்தால் அவன் எல்லா துன்பத்தையும் சந்திக்க வேண்டிய நிலை வரும் என்கிறார். ஆனால் அதற்காக அவர் நாம் நேர்மையற்று நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
அவர் சொல்லக்கூடிய அந்த கருத்துக்களை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால், நம்முடைய நேர்மையை நாம் அறிவாற்றல் கொண்டு இந்து உலகத்திற்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்தி வாழ்வது என்பதை பற்றி நமக்கு அவர் மிகச்சிறந்த அறிவுரையை கொடுத்திருக்கிறார். மேலும், சாணக்கியர் இந்த கருத்துக்களுக்கு ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.
அதாவது இங்கு "நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகிறது" என்று. காடுகளில் உயர்ந்த மற்றும் நேராக இருக்கக் கூடிய மரம் தான் வெட்டுவதற்கு வசதியாக இருக்கும். அதேப்போல் தான் ஒரு மனிதன் எந்த ஒரு நெளிவு இல்லாமல் மிக நேர்மையாக இருந்தால் அந்த மனிதரை அங்கு இருக்கக்கூடிய நபர்களால் குறிவைத்து எளிதாக தாக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
அதாவது நாம் எந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு முதலில் புரிய வேண்டும். நான் உண்மையை தான் பேசுவேன், நான் எப்பொழுதும் நேர்மையாக நடந்து கொள்வேன் என்ற ஒரு எண்ணம் இருப்பது நல்லது என்றாலும் ஒரு நம்பகதன்மையில்லாத ஒரு மனிதரிடம் சென்று உண்மையைச் சொல்வதால் கிடைக்கக்கூடிய பலன் என்னமோ ஆபத்து தான்.
காரணம் நான் பொய் சொல்ல மாட்டேன் என்ற கொள்கை வேறு, யாரிடம் என்ன சொல்வேன் என்று புரிதலோடு இருப்பது வேறு என்கிறார் சாணக்கியர். ஆதலால் எந்த இடங்களில் நாம் எவ்வாறு பேச வேண்டும் யாரிடம் எதை சொல்ல வேண்டும் எந்த இடத்தில் அமைதி காக்க வேண்டும் என்பதை நாம் நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
அதனால் சாணக்கியர் சொல்கிறார் நம்முடைய அடித்தளத்தை நாம் அறிவாற்றல் கொண்டு மிகவும் வலிமையாக்க வேண்டும். மேலும் அவ்வப்போது உண்மையை ஜெயிப்பதற்கு நாம் சற்று வளைந்து கொடுத்து சென்றால் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்று அவர் சொல்கிறார்.
ஆதலால் நேர்மையோடு இருப்பதை தாண்டிலும் அந்த நேர்மையோடு சேர்ந்து அறிவாக செயல்படுவது தான் அந்த நேர்மைக்கு பலன் கிடைக்குமே தவிர்த்து அறிவில்லாமல் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது பயனற்றது என்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |