சாணக்கிய நீதி: வாழ்க்கையில் வெற்றி பெற நாம் முதலில் விட்டுவிட வேண்டிய 5 பழக்கங்கள்
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், மக்களுக்கு பல வகையில் மிக பெரிய வழிகாட்டியாக இருக்கிறார். அவருடைய ஆழ்ந்த அறிவால் நமக்கு பல வாழ்க்கை விஷயங்களை சொல்லுகிறார்.
அப்படியாக, ஒருவர் வாழ்க்கையில் வெற்றி அடைய கட்டாயம் அவர்கள் விட்டுவிட வேண்டிய 5 பழக்கங்களை விட்டு விட வேண்டும் என்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
1. ஒரு மனிதனின் மிக பெரிய எதிரி அவனின் சோம்பல். ஒருவர் மனதில் இலக்குகளையும், ஆசைகளும் வைத்திருப்பதை காட்டிலும் அவர்கள் அதனை அடைய அவர்கள் சோம்பலை விட்டு விடுவதே சிறந்த முன்னேற்றதை கொடுக்கும்.
2. ஒரு விஷயம் செய்யும் முன் அதை பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால், கட்டாயம் என்னால் அந்த விஷயம் செய்யமுடியாது என்று தீர்க்கமாக நம்புவதை கைவிட வேண்டும். வாழ்க்கையில் சாதனை செய்ய துணிச்சல் மிக மிக அவசியம்.
3. மனிதனுக்கு ஆசைகள் உருவாகுவது இயல்பு என்றாலும், அது ஒரு கட்டம் தாண்டும் பொழுது அவை பேராசை ஆகிறது. பேராசை ஒரு மனிதனை மிகுந்த பாதிப்பிற்கு ஆளாக்குகிறது. பல சமயங்களில் பேராசை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.
4. கோபம் மனிதனின் வெளிப்பாடு என்றாலும் அதீத கோபம் அவனையும் அவன் சுற்றி உள்ளவர்களையும் கொன்று விடுகிறது. சமயங்களில் சில உறவுகளுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கிவிடும்.
5. மனிதனிடம் இருக்கவே கூடாத ஒரு கெட்ட செயல்களில் ஆணவமும் ஒன்று. ஆணவம் ஒருவனை நின்று கொல்லும். ஆணவம் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் வளர்ச்சியும் அடையவே முடியாமல் தடுக்கும் பண்புகள் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |